குறைந்த விலையில் கிடைக்கும் 7 சீட்டர் காரான இது அக்டோபர் மாதத்தில் 50% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த மாடல், அதன் மலிவு விலை, விசாலமான பூட் ஸ்பேஸ் போன்ற அம்சங்களால் குடும்பங்களுக்கு சிறந்த தேர்வாக விளங்குகிறது.
இந்தியாவில் குறைந்த விலையில் 7 சீட்டர் கார் வாங்க நினைக்கும் குடும்பங்களுக்கு ரெனால்ட் டிரைபர் ஒரு பெரிய வரவேற்பைப் பெற்ற மாடலாக மாறியுள்ளது. வெறும் ரூ.5.76 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கும் இந்த 7 சீட்டர், செக்மெண்ட்-இன் விலையில் உண்மையான “கேம் சேஞ்சர்” ஆகும். தள்ளுபடி விலை, பயனுள்ள அம்சங்கள், குறைந்த பராமரிப்பு செலவு ஆகிய காரணங்களால் இந்த மாதத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரெனால்ட் நிறுவனமும் சமீபத்தில் வெளியிட்ட விற்பனை கணக்குகள் இதையே உறுதிப்படுத்துகின்றன.
24
ரெனால்ட் டிரைபர் விற்பனை
ஒவ்வொரு மாதமும் ஆட்டோ நிறுவனங்கள் வெளியிடும் விற்பனைத் தரவுகளைப் பார்க்கும்போது, ரெனால்ட் அக்டோபரில் நல்ல உயர்வைக் கண்டுள்ளது. தற்போது ரெனால்ட்டின் கைவரிசையில் Triber, Kwid, Kiger ஆகிய மூன்று மாடல்கள் மட்டுமே உள்ளன. ஆனால் 2025 ஜனவரியில் புதிய வடிவமைப்பில் டஸ்டர் மீண்டும் அறிமுகமாக உள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் ரெனால்ட் 4,672 யூனிட்ஸ் விற்றுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 21% வளர்ச்சி. செப்டம்பருடன் ஒப்பிடுகையில் மாதத்துக்கு மாதம் 10% அதிகரிப்பு ஏற்பட்டது.
34
6 லட்சம் கீழ் 7 சீட்டர்
இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ரெனாலின் மிகப்பெரிய ஹிட் மாடல் Triber. அக்டோபர் 2025-ல் மட்டும் 3,170 யூனிட்ஸ் விற்றுள்ளது, இது கடந்த ஆண்டு 2,111 யூனிட்ஸுடன் ஒப்பிடுகையில் 50% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி. மற்ற இரண்டு மாடல்களில், Kiger அக்டோபரில் 948 யூனிட்ஸ் மட்டுமே விற்றது, இது கடந்த ஆண்டைவிட 9.97% சரிவு. Kwid விற்பனையும் 706-இல் இருந்து 554-ஆக குறைந்துள்ளது.
ரெனால்ட் டிரைபர் விலையில் குறைவாக இருந்தாலும், அம்சங்களில் எந்தக் குறையும் இல்லை. இந்தியாவின் மிகவும் மலிவு 7 சீட்டர் என அழைக்கப்படும் இந்த மாடல் 625 லிட்டர் பரந்த பூட் ஸ்பேஸுடன் வருகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் வரிசைக்கும் ஏசி வென்டுகள், வயர்லெஸ் சார்ஜிங், 21 ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சங்கள், மாறிக்கொள்ளக்கூடிய சீட் லேஅவுட் போன்ற வசதிகள் அனைத்தும் அனைத்து வகைகளிலும் கிடைக்கிறது. எனவே குறைந்த விலையில் அதிக பயன் தேடும் குடும்பங்களுக்கு டிரைபர் இன்னும் சிறந்த தேர்வாக தொடர்கிறது.