Hyundai Offers: ஏப்ரல் மாத ஆஃபர்கள் அள்ளி வீசும் ஹூண்டாய்.. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி?

Published : Apr 09, 2026, 01:15 PM IST

ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா, வென்யூ, i20 உள்ளிட்ட கார்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான ஆஃபர்கள் அறிவித்துள்ளது. எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி என்ற முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

PREV
15
ஹூண்டாய் மாடல்கள் கார்களுக்கு தள்ளுபடி

இந்தியாவில் ஹூண்டாய் கார்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. இப்போது கார் வாங்க நினைப்பவர்களுக்கு ஏப்ரல் மாதம் ஒரு நல்ல வாய்ப்பு. வென்யூ, கிரெட்டா, i20 போன்ற மாடல்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

25
பல்வேறு வடிவங்களில் தள்ளுபடி
ஹூண்டாய் நிறுவனம், ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், பழைய கார்களை மாற்றுவது என பல வழிகளில் சலுகைகளை வழங்குகிறது. இந்த ஆஃபர்கள் ஏப்ரல் மாதத்திற்கு மட்டுமே பொருந்தும். இதனுடன் ஆக்சஸெரீஸ்களும் கிடைக்கின்றன.
35
கிராண்ட் i10 நியோஸ் பெட்ரோல் கார்

கிராண்ட் i10 நியோஸ் பெட்ரோல் காருக்கு ரூ.20,000 ரொக்கத் தள்ளுபடியும், ரூ.10,000 கூடுதல் தள்ளுபடியும் உண்டு. எக்ஸ்டர் காருக்கு ரூ.10,000 ரொக்கத் தள்ளுபடி. வென்யூ காருக்கு கார்ப்பரேட் மற்றும் அரசு ஊழியர்களுக்கான தள்ளுபடிகள் உள்ளன.

45
ஹூண்டாய் கிரெட்டா தள்ளுபடி

ஹூண்டாய் கிரெட்டா ICE காருக்கு ரூ.20,000 ரொக்கத் தள்ளுபடி, ரூ.20,000 கூடுதல் தள்ளுபடி, ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.15,000 அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது. கிரெட்டா எலக்ட்ரிக் காருக்கும் சில சலுகைகள் உள்ளன.

55
i20 ஹூண்டாய் கார்

ஹூண்டாய் i20 காருக்கு ரூ.15,000 ரொக்கத் தள்ளுபடி, ரூ.10,000 கூடுதல் ரொக்கத் தள்ளுபடி, ரூ.20,000 ஸ்கிராப் தள்ளுபடி மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. இதனால் i20 இப்போது குறைந்த விலையில் கிடைக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories