21 மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா நைட்! கருப்பு தீம் கொண்ட வேற லெவல் டிசைன்!!

First Published | Sep 5, 2024, 9:21 AM IST

ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது பிரபலமான க்ரெட்டா சீரிஸ் கார்களில் புதுவரவாக நைட் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலையை ரூ.14.50 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.

Hyundai Creta Knight

ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது பிரபலமான க்ரெட்டா சீரிஸ் கார்களில் புதுவரவாக நைட் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலையை ரூ.14.50 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய அம்சங்களை மாற்றாமல் தோற்றத்தில் புதுமையைக் கொண்டுவந்துள்ளது. சுமார் 21 மாற்றங்களைக் காணலாம்.

Hyundai Creta Knight

க்ரெட்டா நைட் எடிஷன் உள்ளேயும் வெளியேயும் பிரமிக்க வைக்கும் கருப்பு நிறத் தோற்றதைப் பெற்றுள்ளது. வெளிப்புறத்தில், முன்புற கிரில், ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் ஹூண்டாய் லோகோவுடன் கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பிளாக்-அவுட் ORVM, ரூஃப் ரயில்கள் மற்றும் மாறுபட்ட சிவப்பு பிரேக் காலிப்பர்களுடன் 17-இன்ச் கருப்பு அலாய் வீல்கள் உள்ளன. இது எஸ்யூவிக்கு ஸ்போர்ட்டி தோற்றத்தைக் கொடுக்கிறது.

Tap to resize

Hyundai Creta Knight

உட்புறத்தில், முழுவதும் நைட் எடிஷனின் டார்க் தீம் உள்ளது. மெட்டல் பெடல்கள், லெதர் கவர் கொண்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் பித்தளை கியர் நாப் ஆகியவை உள்ளேயும் ஸ்போர்ட்டி தோற்றத்தை மெருகேற்றுகின்றன. இருக்கைகளும் கருப்பு நிறத்தில் பித்தளை நிற தையல்களைக் கொண்டுள்ளன.

Hyundai Creta Knight

2024 ஹூண்டாய் க்ரெட்டா நைட் 1.5 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. ஆறு ஸ்பீடு மேனுவல் இருக்கிறது. க்ரெட்டா நைட் எடிஷன், ரூ. 5,000 கூடுதல் விலையில் டைட்டன் கிரே மேட் நிறத்தையும் வழங்குகிறது. கூடுதலாக ரூ.15,000 செலுத்தினால் டூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷனும் கிடைக்கும்.

Hyundai Creta Knight

நைட் எடிஷனின் விலை ரூ. 14.50 லட்சம் முதல் ரூ. 20.14 லட்சம் வரை உள்ளது. எஸ்யூவியின் விலை தேர்வு செய்யும் வேரியண்ட் மற்றும் கூடுதல் ஆப்ஷன்களைப் பொறுத்து மாறுபடுகிறது. பெட்ரோல் எஞ்சினுக்கு, க்ரெட்டா நைட் எஸ்(ஓ) எம்டியின் விலை ரூ.14.5 லட்சமாகவும், எஸ்(ஓ) ஐவிடி வகையின் விலை ரூ.16 லட்சமாகவும் உள்ளது.

Hyundai Creta Knight

எஸ்எக்ஸ்(ஓ) எம்டி ரூ.17.42 லட்சத்திலும், எஸ்எக்ஸ்(ஓ) ஐவிடி ரூ.18.88 லட்சத்திலும் கிடைக்கிறது. 1.5லி U2 CRDi டீசல் எஞ்சினுக்கு, க்ரெட்டா நைட் எஸ்(ஓ) எம்டியின் விலை ரூ.16.08 லட்சம். இதேபோல, எஸ்(ஓ) ஏடி ரூ.17.58 லட்சம், எஸ்எக்ஸ்(ஓ) எம்டி ரூ.18.99 லட்சம், எஸ்எக்ஸ்(ஓ) ஏடி ரூ.20.14 லட்சம் விலையில் கிடைக்கும். அனைத்து எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!