ரயிலில் பைக் பார்சல் அனுப்பனுமா.? இவ்வளவு தான் கட்டணமா.? வழிமுறை என்ன தெரியுமா.?

First Published | Sep 6, 2024, 10:22 AM IST

BIKE PARCEL : வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும்போது பைக்கை எடுத்துச் செல்ல ரயில் பார்சல் ஒரு சிறந்த வழி. இந்த வழிமுறையைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள படிக்கவும்.

பணிக்காக வெளியூர் பயணம்

பணி நிமித்தமாக ஏராளமான மக்கள் பல ஊர்களுக்கு இடம்பெயர்ந்து செல்கிறார்கள். தமிழகத்திற்குள் மட்டுமில்லாமல் வெளிமாநிலங்களுக்கும் செல்லும் சூழல் உருவாகிறது. இதனால் சொந்த ஊரில் உள்ள இரு சக்கர வாகனத்தை எப்படி எடுத்து செல்வது 500 முதல் 1000க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தூரத்தை பைக்கில் பயணம் செய்வது சாத்தியமில்லாத ஒன்று. எனவே எப்படி கொண்டு செல்லலாம், இதற்கு என்ன வழிமுறை என மக்கள் தேட தொடங்குவார்கள்.

அதில் லாரியில் பார்சல் அனுப்புவது, பேருந்தில் பார்சல் அனுப்புவது அடுத்தது ரயிலில் பார்சல் செய்வது. இதில் பெரும்பாலான மக்கள் தங்கள் வாகனம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வந்து சேர்வதற்கு ரயிலில் வாகனத்தை அனுப்புவதையே முக்கியத்துவம் கொடுப்பார்கள். 

ரயிலில் பைக்கை எப்படி பார்சல் அனுப்ப வேண்டும்

லாரியில் அனுப்பும் போது மற்ற பொருட்களை பைக் மீது குவித்து வைக்கும் சூழ்நிலை உருவாகும் இதனால் வாகனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் இதனை கருத்தில் கொண்டே ரயிலில் இரு சக்கர வாகனத்தை அனுப்ப பெரும்பாலனோர் விரும்புவார்கள். எனவே பைக்கை எப்படி அனுப்ப வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.   ரயிலில் பைக்கை அனுப்பி வைப்பதற்கு இரண்டு முறை உள்ளது.

ஒன்று இங்கிருந்து பைக் அனுப்பிவைத்தால் வேறொரு இடத்தில் நமது உறவினர்களோ அல்லது நண்பர்களோ பைக்கை பெற்றுக்கொள்ளும் முறை. இரண்டாவது நாம் பயணம் செய்யும் ரயிலிலையே பைக்கை கொண்டும் செல்லும் முறை. ரயில் நிலையத்தில் இறங்கியதும் வாகன உரிமையாளரே பைக்கை நேரடியாக பெற்றுக் கொள்ளும் முறை.

Latest Videos


எந்த ரயில் நிலையத்திற்கு அனுப்ப வேண்டும்

முதலில் பைக் எந்த ஊருக்கு அனுப்ப போகிறோம் என்பதை முடிவ செய்ய வேண்டும், சிறிய ரயில் நிலையத்திற்கு இரு வாகனத்தை பார்சலாக அனுப்புவது இயலாத காரியம், எனவே அருகில் உள்ள பெரிய ரயில் நிலையத்தை தேர்வு செய்ய வேண்டும். சிறிய ரயில் நிலையத்தில் ரயில்கள் நீண்ட நேரம் நிற்காது. எனவே பெரிய ரயில் நிலையம் என்றால் பார்சலை இறக்க ஆட்கள் இருப்பார்கள். எனவே அதனை முதலில் தேர்வு செய்யப்பட வேண்டும்,

ஒரு சில நேரங்களில் பைக் உள்ளே இருக்கும். வெளியே மற்ற பொருட்கள் நிரப்பப்பட்டு விட்டால் சிரம்மாக அமைந்து விடும். இதனிடையே  பைக்கை ரயிலில் பார்சலாக அனுப்புவது தொடர்பாக முதல் கட்டமாக ரயில் நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஒரு சில இடங்களில் பார்சல் செய்வது மாறுபடும். குறிப்பாக பைக்கில் சிலேட்டில் வாகன எண் பதிவு செய்யப்படும். மற்றொன்று அட்டையில் எழுதி தொங்கவிடப்படும்.

பெட்ரோல் இருந்தால் அபராதம்

நாம் பயணம் செய்யும் ரயிலிலையே வாகனத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றால் முன்கூட்டியே புக் செய்வது நல்லது. மேலும் ரயிலில் கொண்டு செல்ல 3 மணி நேரத்திற்கு முன்பாக ரயில் நிலையம் வர வேண்டும். அங்கு வரும் பொழுது வண்டியில் உள்ள பெட்ரோல் முழுக்க, முழுக்க அகற்றிட வேண்டும். வாகனத்தில் பெட்ரோல் இருந்தால் ஏற்ற மாட்டார்கள். ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உள்ளது.

எனவே ரயில் நிலையம் சென்றதும் முழுவதுமாக பெட்ரோல் டியூப் கொண்டு அகற்றிவிட வேண்டும். ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் புக்கிங் செய்யும் அதிகாரியை பார்த்து பார்சல் தொடர்பாக தகவலவை தெரிவித்ததும் ஒரு படிவத்தை தருவார். அதில் பைக் எண், ஆர்சி புக் எண், செல்லும் இடம், பெறுபவர் பெயர் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். மேலும் ஆதார் நகல், ஆர்சி புக் நகல் போன்றவற்றையும் கொடுக்க வேண்டும். இதனையடுத்து செல்லும் தூரத்தை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும்.
 

கட்டணம் எவ்வளவு தெரியுமா.?

உதாரணத்திற்கு சென்னையில் இருந்து நெல்லை செல்ல 1700 ரூபாய் கட்டணமும், காரைக்குடியில் இருந்து சென்னைக்கு 250 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை செலுத்திய பிறகு அடுத்ததாக வாகனத்தில் உள்ள கண்ணாடி, விளக்கு மற்றும் சீட் கவர் போன்ற பகுதிகளை வெள்ளை சாக்கை கொண்டு மூட வேண்டும். தனியாக நாமே மூடுவதாக இருந்தாலும் மூடிக்கொள்ளலாம்.

இல்லையென்றால் ரயில் நிலையத்திலையே வாகனத்தை பாதுகாப்பாக மூட நபர்கள் இருப்பார்கள். அதற்கு கட்டணமாக சாதரணமாக பேக்கிங் செய்ய 400 ரூபாயும், சிறப்பாக பேக்கிங் செய்ய 500 ரூபாயும் வசூலிப்பார்கள். இதனையடுத்து வெள்ளை நிற சாக்கின் மீது வாகனத்தின் எண், ரயிலில் பதிவு செய்யப்பட்ட எண்களை எழுதுவார்கள். இறுதியாக ரயில்வே போலிசார் வாகனத்தை சோதனை செய்து வண்டியில் பெட்ரோல் உள்ளதா என ஆய்வு செய்வார்கள். இதனையடுத்து நாம் பயணம் செய்யும் வண்டியில் அனுப்பப்படும். 

ஆர்சி புக் கட்டாயம்

இல்லையென்றால் வண்டியை பெறுபவர்கள் வேறு நபர்களாக இருந்தால் அடுத்தடுத்து தினங்களில் வாகனம் அனுப்பி வைக்கப்படும். நாம் செல்லும் ரயிலிலையே வாகனங்கள் அனுப்பி வைத்தால் நாம் இறங்கும் போதும் ரயில்களில் இருந்து இரு சக்கர வாகனமும் இறக்கப்படும். இறுதி ரயில் நிலையம் என்றால் மற்ற பொருட்களோடு சேர்ந்து நமது வாகனமும் இறக்கப்படும். எனவே ரயிலில் இருந்து இறக்கியதும் உடனடியாக வாகனத்தை பெற்றுக்கொள்ள முடியாது.

வாகனத்தை பார்சல் அலுவலகம் கொண்டு செல்வார்கள் அங்குள்ள அதிகாரியிடம் பார்சல் புக் செய்த ரசீதை காண்பிக்க வேண்டும். அப்பொழுது தான் பைக்கை நம்மிடம் ஒப்படைப்பார்கள். இதனையடுத்து பெட்ரோல் இல்லாத வாகனத்தை பெட்ரோல் பங்கிற்கு கொண்டு சென்று பெட்ரோல் போட்ட பிறகு வீட்டிற்கு ஓட்டி செல்லலாம்.

இன்சூரன்ஸ் கட்டாயமா.?

பெரும்பாலும் ரயிலில் பைக் பார்சல் செய்வது கட்டணம் என்பது சற்று அதிகமாகவே உள்ளது. பார்சல்களை விட பைக்கை கொண்டு செல்வதற்கான லக்கேஜ் கட்டணம் அதிகம். 500 கிலோமீட்டர் தூரத்திற்கு பைக்கை அனுப்புவதற்கான சராசரி கட்டணம் பொதுவாக ரூ.1200 வசூலிக்கப்படுகிறது. நீண்ட தூரம் என்றால் ரயிலில் பைக் பார்சல் செய்வது சரியாக இருக்கும். குறைந்த தூரத்திற்கு பார்சல் அனுப்புவது என்பது கட்டணமும் அதிகம்,

நடைமுறையும் சற்று அதிகமாக இருக்கும். முக்கியமாக ரயிலில் பைக் அல்லது ஸ்கூட்டரின் ஆர்சி மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் அனுப்புவது சற்று கடிதம், இன்சூரன்ஸ் கூட முக்கிய தேவையில்லை கட்டாயம் ஆர்சி புக் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார்சல் முன்பதிவு செய்ய காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்

click me!