ஹோண்டா ஷைன் 125, தினசரி பயணங்களுக்கு ஏற்ற ஒரு சிறந்த பைக் ஆகும். இது 55 kmpl மைலேஜ், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் மென்மையான இன்ஜின் செயல்திறன் ஆகியவற்றுக்காக அறியப்படுகிறது. இதன் விலை, அம்சங்களை இங்கு பார்க்கலாம்.
நகரத்தில் தினமும் அலுவலகம் அல்லது வேலைக்காக பைக் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்ற மாடலாக ஹோண்டா ஷைன் 125 நீண்ட காலமாக அறியப்படுகிறது. எளிதான ஓட்டம், நல்ல மைலேஜ், குறைந்த பராமரிப்பு செலவு ஆகிய காரணங்களால் இந்த பைக் நடுத்தர வர்க்க பயணிகளிடையே பிரபலமாக உள்ளது. வடிவமைப்பு மற்றும் மென்மையான இன்ஜின் செயல்திறன் காரணமாக தினசரி பயணங்களுக்கு இது மிகவும் வசதியான தேர்வாக பார்க்கப்படுகிறது.
25
இன்ஜின் மற்றும் செயல்திறன்
இந்த பைக்கில் 123.94cc திறன் கொண்ட ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் PGM-FI இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. BS6 விதிமுறைகளைப் பின்பற்றும் இந்த இன்ஜின் சுமார் 10.59 bhp சக்தியையும் 11 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருப்பதால் நகரப்பயணங்களில் மென்மையான ஓட்ட அனுபவம் கிடைக்கிறது. மேலும், இந்த பைக் அதிகபட்சமாக சுமார் 100 kmph வரை வேகத்தை எட்டக்கூடிய திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.
35
மைலேஜ் மற்றும் எரிபொருள் திறன்
மைலேஜ் விஷயத்தில் ஹோண்டா ஷைன் 125 நல்ல மதிப்பீடு பெற்றுள்ளது. ARAI தரவுகளின்படி, இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலில் சுமார் 55 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது. 10.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளதால், ஒரு முழு டேங்கில் 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும்.
ஹோண்டா ஷைன் 125 பைக்கில் பல பயனுள்ள அம்சங்கள் உள்ளன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மூலம் ரியல் டைம் மைலேஜ், டிஸ்டன்ஸ்-டு-காலி, சர்வீஸ் நினைவூட்டல் போன்ற தகவல்களை பார்க்கலாம். கூடுதலாக 15W USB-C சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளதால் பயணத்தின் போது மொபைலை எளிதாக சார்ஜ் செய்ய முடியும். பாதுகாப்புகளாக CBS பிரேக்கிங் சிஸ்டம், சைடு-ஸ்டாண்ட் இன்ஜின் கட்-ஆஃப், 240mm முன் டிஸ்க் பிரேக் போன்ற வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
55
விலை மற்றும் வேரியண்ட் விவரம்
ஹோண்டா ஷைன் 125 இந்தியாவில் இரண்டு முக்கிய வேரியண்ட்களில் கிடைக்கிறது. டிரம் பிரேக் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.80,852 ஆகும். அதே நேரத்தில் டிஸ்க் பிரேக் மாதலின் விலை சுமார் ரூ.85,211 வரை இருக்கும். ஆர்டிஓ, இன்சூரன்ஸ் உள்ளிட்ட கட்டணங்களை சேர்த்தால், ஆன்ரோடு விலை ரூ.94,000 முதல் ரூ.99,000 வரை செல்லலாம். இந்த 125cc பிரிவில் இது ஹீரோ ஸ்பிளெண்டர் மற்றும் டிவிஎஸ் ரைடர் 125 போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது.