Honda Activa Electric Scooter
வாகன சந்தையில் மின்சார வாகனங்களுக்கான தேவை மிக அதிகமாக அதிகரித்து வருகிறது என்றே நாம் கூறலாம். குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக பலரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகிறார்கள். ஹோண்டாவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அது வேறு எந்த மாடலும் இல்லை, ஏற்கனவே சந்தையில் சக்கைப்போடு போட்டு கொண்டிருக்கும் ஹோண்டா ஆக்டிவா மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி தான்.
Honda Activa
ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரக்ஷன் எலக்ட்ரிக் உடன் ஸ்பீட் ரேஞ்ச் மற்றும் ட்ரிப் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடன், இந்த ஸ்கூட்டரில் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் எல்இடி லைட் போன்ற அம்சங்களும் வரவுள்ளது.
Honda Electric Scooter
கிளாசிக் ஆக்டிவா வடிவமைப்புடன் வரும் அதேவேளையில், எலக்ட்ரிக் வேரியண்ட் பல சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது என்று உறுதியாக சொல்லலாம். ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி பற்றிய விவரங்களை ஹோண்டா இன்னும் வெளியிடவில்லை. ஆனால் ஒரு ஒரு பெரிய பேட்டரி பேக் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்கூட்டரின் செயல்திறனை வெகுவாக அதிகரிக்கும்.
Honda Activa Electric Price
இந்த ஸ்கூட்டரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 240 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் விலையைப் பற்றி பார்க்கும்போது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது 1 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என்று வாகன சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஸ்கூட்டர் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2025 இல் வெளியிடப்பட உள்ளது.
குடும்பங்களுக்கு ஏற்ற மாருதியின் புதிய 7 சீட்டர் கார்.. விலை எவ்வளவு தெரியுமா?