ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2025ல் ஹோண்டா தனது புதிய 0 ஆல்ஃபா எலக்ட்ரிக் எஸ்யூவி முன்மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஹோண்டாவின் புதிய 0 சீரிஸின் முதல் மாடலாகும்.
ஜப்பானிய வாகன பிராண்டான ஹோண்டா, தனது புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி முன்மாதிரியான ஹோண்டா 0 ஆல்ஃபா-வை ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2025ல் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஹோண்டாவின் புதிய 0 சீரிஸ் மாடல்களில் முதல் எலக்ட்ரிக் வாகனமாகும். வலுவான மற்றும் அழகான வடிவமைப்புடன், ஆல்ஃபா எஸ்யூவி நகரிலும், நீண்ட பயணத்திலும் சிறந்த ஓட்டுநர் அனுபவத்தை தரக் கூடியது.
முன்னணி கிரில்லில் ஒளிரும் ஹோண்டா லோகோ, முழு எல்இடி பார், இரட்டை ஹெட்லெம்புகள் மற்றும் 19-இன்ச் அலாய் வீல்கள் வாகனத்திற்கு பிரிமியம் தோற்றத்தை அளிக்கின்றன. பக்கவாட்டில் தடிமனான பாடி கில்லாடிங் மற்றும் முக்கிய வீல் அர்ச்சல்கள் வலிமையை தருகின்றது.
23
ஹோண்டா 0 ஆல்ஃபா அம்சங்கள்
மேலும் சார்ஜிங் போர்ட் முன்பக்கத்தில் சுலபமாக அணுகக்கூடியதாக அமைந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக, ஹோண்டா 0 ஆல்ஃபா புதிய தலைமுறை தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பத்துடன் வருகிறது.
செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட சென்சார்கள் மற்றும் டிரைவர் கண்காணிப்பு அமைப்புகள் மூலம், வாகனம் மனித ஓட்டுநர்களைப் போல முடிவுகள் எடுக்கக் கூடியது. இது பல சூழ்நிலைகளில் விரிவான ஹேண்ட்ஸ்-ஃப்ரீ இயக்க அனுமதி, பயணத்தின்போது பாதுகாப்பு வசதியையும் அதிகரித்துள்ளது.
33
ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2025
பேட்டரி விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை என்றாலும், 0 ஆல்ஃபா எஸ்யூவி இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது – 60 kWh மற்றும் 75 kWh. ஹோண்டாவின் 0 சீரிஸ் புதிய EV பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டு, 2030க்குள் உலகளவில் 30 புதிய எலக்ட்ரிக் கார்களின் ஒரு பகுதியாக இதன் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட உலகின் முன்னணி சந்தைகளில் ஆல்ஃபா அறிமுகம் செய்யப்படும். அதே சமயம், வேகமான சார்ஜிங் திறன் மற்றும் அறிவார்ந்த ஓட்டுநர் தொழில்நுட்பம் ஹோண்டா 0 ஆல்ஃபாவை பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவி பிரிவில் வலுவான போட்டியாளராக மாற்றும்.