Hero VIDA: 140 கிமீ ரேஞ்ச், 90 கிமீ வேகம்.. நேபாளத்தில் அறிமுகமான ஹீரோ விடா VX2 ஸ்கூட்டர்

Published : Jul 28, 2026, 04:03 PM IST

Hero VIDA: இந்தியாவின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் தனது இடத்தை வலுப்படுத்தியுள்ள ஹீரோ விடா, தற்போது சர்வதேச சந்தையை நோக்கி முக்கியமான அடியை எடுத்துள்ளது.

PREV
13
சாதனை படைத்த ஹீரோ விடா ஸ்கூட்டர்

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், தனது விடா எலக்ட்ரிக் வாகன பிராண்டை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உலகளாவிய பயணத்தின் முதல் கட்டமாக நேபாளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் முன்னணி வாகன விநியோக நிறுவனமான CG மோட்டார்ஸ், சௌத்ரி குழுமத்தின் ஒரு அங்கமாகும். 

இந்த கூட்டணி, விடா பிராண்டின் சர்வதேச விரிவாக்கத்தில் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. நேபாள சந்தைக்காக விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சீரிஸ் மற்றும் விடா DIRT.E K3 யூத் ஆஃப்-ரோடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

50,000 ஸ்கூட்டர்கள் தயாரிப்பு.. மக்கள் போட்டிபோட்டு வாங்குறாங்க.. அப்படி என்ன ஸ்பெஷல்?

23
ஹீரோ விடா குளோபல் லாஞ்ச்

VX2 சீரியஸில் VX2 Plus மற்றும் VX2 Go என இரண்டு வேரியண்ட்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக நேபாளத்தின் மலைப்பாங்கான மற்றும் கரடுமுரடான சாலைகளை கருத்தில் கொண்டு VX2 Plus என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. VX2 Plus மாடலில் 4.4 kWh திறன் கொண்ட பேட்டரி அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு 2.2 kWh மாற்றக்கூடிய (swappable) பேட்டரி யூனிட்கள் இடம்பெறுகின்றன. 

நிறுவனம் தெரிவித்துள்ள தகவலின்படி, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரை உண்மையான (ரியல்-வேர்ல்ட்) ரேஞ்ச் கிடைக்கும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிலோமீட்டர். மேலும், 0 முதல் 40 கிமீ/மணி வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியின் மூலம் 65 நிமிடங்களில் 0 முதல் 80% வரை பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.

ரூ.7.40 லட்சத்தில் புதிய பிரெஸ்ஸா.. விலை, வேரியன்ட், புதிய அம்சங்கள் முழு விவரம்!

33
ஹீரோ மோட்டோகார்ப்

இந்த வெளியீடு குறித்து ஹீரோ மோட்டோகார்பின் வளர்ந்து வரும் மொபிலிட்டி வர்த்தகப் பிரிவின் தலைமை வர்த்தக அதிகாரி கௌசல்யா நந்தகுமார், "விடா-வின் உலகளாவிய பயணம் இது ஒரு முக்கிய தருணம். 

ஸ்மார்ட் எலக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக ஏற்றுக்கொள்ளப்படும் சந்தையான நேபாளத்தில் இருந்து சர்வதேச விரிவாக்கத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று தெரிவித்துள்ளார். நேபாளத்தில் வெற்றிகரமாக செயல்பட்ட பிறகு, மேலும் பல சர்வதேச சந்தைகளிலும் விடா பிராண்டை அறிமுகப்படுத்திய ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories