Electric Scooter: இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றான ரிவர் மொபிலிட்டி, தனது உற்பத்திப் பயணத்தில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் தனது இடத்தை வலுப்படுத்தி வரும் ரிவர் மொபிலிட்டி, புதிய உற்பத்தி சாதனையை பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹொஸ்கோட்டேவில் உள்ள தனது உற்பத்தி நிலையத்தில் இருந்து 50,000வது ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனம் வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மைல்கல்லை, ரிவர் இண்டி அறிமுகமான மூன்று ஆண்டுகளுக்குள் எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
24
ஹொஸ்கோட்டே தொழிற்சாலை
உற்பத்தி சாதனையுடன், நிறுவனத்தின் விற்பனை வலையமைப்பும் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் 75-க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் மூலம் ரிவர் தனது வாடிக்கையாளர்களை சென்றடைகிறது. ஹொஸ்கோட்டே தொழிற்சாலையிலேயே ரிவர் இண்டி ஸ்கூட்டர்களுடன், அவற்றுக்கான பேட்டரி பேக்குகளும் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாட்டை ஒரே இடத்தில் நிறுவனம் மேற்கொள்கிறது.
ரிவர் நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் தற்போது இண்டி மட்டுமே இடம்பெற்றுள்ளது. குடும்ப பயன்பாட்டை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், அன்றாட பயணங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விசாலமான ஸ்டோரேஜ் வசதி, 14-இன்ச் பெரிய சக்கரங்கள் மற்றும் செயல்திறன் மிக்க எலக்ட்ரிக் மோட்டார் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். நகர்ப்புற மற்றும் புறநகர் சாலைகளில் சீரான பயண அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது ரிவர் இண்டியின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,55,199 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ள ரிவர் ஷோரூம்களில் டெஸ்ட் ரைடு முன்பதிவு செய்யவோ அல்லது நேரடியாக வாங்கவோ முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய மின்சார வாகன சந்தையில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தி திறன் மற்றும் விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்தும் ரிவர் Mobility-யின் இந்த சாதனை, எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.