5 ஆண்டு உத்தரவாதம்.. அதிக மைலேஜ்.. ஹீரோ பேஷன் எக்ஸ் டெக் விலை எவ்வளவு தெரியுமா?

First Published | Aug 14, 2024, 2:49 PM IST

இளம் தலைமுறையினரை இலக்காகக் கொண்டு ஹீரோ மோட்டோகார்ப் புதிய பேஷன் எக்ஸ் டெக் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய எல்இடி ஹெட்லேம்ப், புளூடூத் இணைப்பு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.

Hero Passion XTEC Price

உலகின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp)  ஹீரோ பேஷன் எக்ஸ் டெக் (Hero Passion XTec) பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இது இன்றைய இளம் தலைமுறையினருக்காக பல்வேறு வசதிகள் கிடைக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய பேஷன் எக்ஸ் டெக் (Passion XTec) ஆனது செக்மென்ட்டில் சிறந்த ப்ரொஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப்களுடன் வருகிறது.

Hero Passion XTEC

இது வழக்கமான ஹாலஜன் விளக்குகளுடன் ஒப்பிடும்போது 12 சதவிகிதம் நீளமான பீம் கொண்ட பிரிவில் சிறந்த பிரகாசத்தை வழங்குகிறது. புதிய ஹெட்லேம்ப் வடிவமைப்பு மோட்டார்சைக்கிளின் ஸ்போர்ட்டினஸ் மற்றும் ஏரோடைனமிக்ஸை மேம்படுத்துகிறது என்றே கூறலாம். இந்த பைக் குரோம் செய்யப்பட்ட 3D பிராண்டிங் மற்றும் ரிம் டேப்பைப் பெறுகிறது. இது அதன் பிரீமியம் கவர்ச்சியை அதிகரிக்கிறது.

Tap to resize

Hero MotoCorp

முழு டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் கன்சோல் ஒருங்கிணைந்த யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டுடன் கூடிய புளூடூத் இணைப்பு, அழைப்பாளர் பெயருடன் வரும் தொலைபேசி அழைப்பு எச்சரிக்கைகள், தவறவிட்ட அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் அறிவிப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஃபோன் பேட்டரி சதவீதம், நிகழ்நேர மைலேஜ் மற்றும் சர்வீஸ் அட்டவணை நினைவூட்டல் மற்றும் குறைந்த எரிபொருள் காட்டுதல் போன்ற தகவல்களையும் காட்டுகிறது.

Affordable Bike

டிஸ்க் பிரேக்குகள் மற்றும் சிறந்த கையாளுதலுக்காக காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (CBS) ஆகிய வசதிகளும் உள்ளது. அதேபோல எஞ்சினைப் பற்றி பேசினால், புதிய Passion Pro XTec ஆனது 110cc BS-6 எஞ்சினுடன் வருகிறது. இந்த எஞ்சின் 7500 ஆர்பிஎம்மில் 9 பிஎச்பி ஆற்றலையும், அதிக செயல்திறன் கொண்ட சவாரிக்கு 5000 ஆர்பிஎம்மில் 9.79 என்எம் உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது.

Passion XTec Specs

இந்த புதிய பேஷன் எக்ஸ் டெக் ஆனது மேம்பட்ட எரிபொருள் செயல்திறனுக்காக காப்புரிமை பெற்ற i3S தொழில்நுட்பத்துடன் வருகிறது, இதன் மூலம் அதிக மைலேஜை வழங்குகிறது. விலையைப் பற்றி பார்க்கும்போது ஹீரோ பேஷன் எக்ஸ் டெக் டிரம் வேரியண்ட்டிற்கான விலையை 74,590 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. அதே நேரத்தில் டிஸ்க் வேரியண்ட் ரூ.78,990க்கு கிடைக்கிறது. இந்த இரண்டு விலைகளும் டெல்லியில் எக்ஸ்-ஷோரூம் ஆகும். மேலும் இது 5 ஆண்டு உத்தரவாதத்துடன் வருகிறது.

Latest Videos

click me!