முன்பெல்லாம் கார், பைக்குகள் முழுக்க இரும்பினால் தயாரிக்கப்பட்டன. தற்போது ஃபைபரை வைத்துத் தயாரிக்கிறார்கள். இதனால் சூரிய ஒளி எரிபொருள் டேங்கில் படும்போது எரிபொருள் ஆவியாகிவிடும். எனவே தொட்டியை ஏதேனும் துணி அல்லது கவர் கொண்டு மூடுவது நல்லது. வாகனத்தை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது சர்வீஸ் செய்வதும் அவசியம். எண்ணெய், வடிகட்டிகள், பிளக்குகள் போன்ற பாகங்களை சுத்தம் செய்வது முக்கியம்.