குடும்பத்தோட பயணிக்க இதுதான் பெஸ்டு சாய்ஸ்... அசத்தும் சிட்ரான் சி3 ஏர்கிராஸ் கார்!

Published : Jan 07, 2024, 07:36 PM IST

குடும்பத்துடன் வசதியாக நீண்ட தூரம் பயணிக்க ஏற்ற கார்களில் ஒன்று சிட்ரான் சி3 ஏர்கிராஸ். இந்தக் காரில் உள்ள 5 முக்கிய அம்சங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்கின்றன.

PREV
15
குடும்பத்தோட பயணிக்க இதுதான் பெஸ்டு சாய்ஸ்... அசத்தும் சிட்ரான் சி3 ஏர்கிராஸ் கார்!
டிசைன்

சிட்ரான் சி3 ஏர்கிராஸ் (Citroen C3 Aircross) கருப்பு மற்றும் குரோம் நிறத் தோற்றம் பார்ப்பதற்கு ப்ரீமியம் லுக் கொடுக்கிறது. கூர்மையான மற்றும் இறுக்கமான டெயில் விளக்கு வடிவமைப்பும் புதுமையாக உள்ளது.

25
இடவசதி

சிட்ரான் சி3 ஏர்கிராஸ் (Citroen C3 Aircross) 2,671 மிமீ வீல்பேஸ் காரணமாக, சிறந்த கேபின் கொண்டதாக இருக்கிறது. கூடுதல் ஹெட்ரூம் மற்றும் 511 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு கப் ஹோல்டர்கள் உள்ளன. இருக்கைகள் வெவ்வேறு தேவைகளுக்கு பயன்படக்கூடியது.

35
டர்போ சார்ஜ்

சிட்ரான் நிறுவனத்தின் இந்தக் கார் 1.2-லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் கொண்டது. மூன்று-சிலிண்டர் மோட்டார் 110 hp மற்றும் 190 Nm முறுக்குவிசையை வழங்குகிறது.

45
நவீன வசதிகள்

C3 Aircross இல் நான்கு பவர் விண்டோக்களிலும் ஒன் டச் ஆட்டோ டவுன் வசதி, ரிமோட் கீலெஸ் என்ட்ரி, எலக்ட்ரிக் ORVM, ரியர் டிஃபோகர், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், 6-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், 10.2-இன்ச். இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன் ஆகியவை உள்ளன.

55
ஆச்சரியமூட்டும் விலை

Citroen C3 Aircross கவர்ச்சிகரமான விலையிலும் கிடைக்கிறது. ரூ.9.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலையுடன் இந்த SUV கார் விற்பனை செய்யப்படுகிறது. டாப் வேரியிண்ட் ரூ.12.34 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories