இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மகேந்திரா கார் தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் வேலுசாமி, " நாளை முதல் இந்த இரண்டு மின்சார கார்களின் சோதனை ஓட்டம் தொடங்கும் . ஏற்கனவே இந்த கார்களை அறிமுகம் செய்து விட்டோம். இரண்டு கார்களுமே முழுவதும் மின்சார கார்களாக உள்ளன.
கார்களின் பேட்டரி 20 நிமிடத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும் , முழு அளவில் சார்ஜ் ஆனவுடன் 500 கி.மீ தூரம் வரை செல்லும் . குறைத்த நேரத்தில் சார்ஜ் ஆவது , அதிக தூரம் செல்வது இரண்டும்தான் இந்த கார்களின் சிறப்பம்சம்.