சரியான நேரத்தில் என்ஜின் ஆயிலை மாற்றவும்
டீசல் காரில், ஒவ்வொரு 5,000 முதல் 7,500 கிலோமீட்டருக்கும் என்ஜின் ஆயலை மாற்ற வேண்டும். காரில் செயற்கை என்ஜின் ஆயில் இருந்தால், அதை 10,000 முதல் 15,000 கிலோமீட்டர் வரை மாற்ற வேண்டும். ஆனால் முன்கூட்டியே ஆயில் குறைந்திருந்தால் அல்லது கருப்பு நிறமாக மாறியிருந்தால், நீங்கள் டாப்-அப் செய்யலாம். ஆயிலை மாற்றுவதுடன், ஆயில் ஃபில்டரையும் மாற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.