பெட்ரோல் பயன்படுத்தும் போது காரின் ஸ்டார்ட் மென்மையாக இருக்கும். குறிப்பாக குளிர் காலையிலோ, நீண்ட நேரம் கார் நிறுத்தி வைத்த பிறகோ, பெட்ரோலில் ஸ்டார்ட் செய்வது இன்ஜினுக்கு நல்லது. இதனால் இன்ஜினுக்கு தேவையான லூப்ரிகேஷன் கிடைக்கிறது. இன்ஜின் பாகங்கள் சீராக இயங்க உதவுவதால், நீண்ட காலத்தில் இன்ஜின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.