ரூ. 50000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இவ்ளோ கிலோமீட்டர் மைலேஜ் தருதா.. அடடா இப்பவே வாங்கிடலாம் போலயே..

First Published | Aug 27, 2024, 3:37 PM IST

இந்த பதிவில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் பற்றி பார்க்க போகிறோம். யோ எட்ஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், டிவிஎஸ் எக்ஸ் எல் 100 கம்போர்ட் மற்றும் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 ஹெவி டியூட்டி ஆகியவை குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த இருசக்கர வாகனங்கள் ஆகும்.

Cheapest Electric Scooter

மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இந்த இருசக்கர வாகனங்கள் பெரிதும் உதவுகின்றன. இன்றும், பைக் அல்லது ஸ்கூட்டர் வாங்குவதற்கு முன், அதன் விலை குறித்த தகவல்களைப் பெற மக்கள் விரும்புகிறார்கள். ஐம்பதாயிரம் ரூபாய் லிமிட்டில் உள்ள பைக், ஸ்கூட்டர்களை மக்கள் தேடி வருகின்றனர். நீங்களும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறைவான ஸ்கூட்டர் அல்லது பைக்கைத் தேடுகிறீர்களானால், உங்களுக்கான பதிவுதான் இது.

Yo Edge

யோ எட்ஜ் ஒரு சிறந்த மின்சார ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டரில் சார்ஜ் செய்ய USB சார்ஜிங் போர்ட் உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிமீ தூரத்தை கடக்கும். இந்த EVயில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 7 முதல் 8 மணி நேரம் ஆகும். இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும். யோ எட்ஜ் 5 வண்ணங்களில் சந்தையில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரின் சராசரி எக்ஸ்ஷோரூம் விலை ரூ.49,086 ஆகும்.

Tap to resize

TVS XL 100 Comfort

டிவிஎஸ் எக்ஸ் எல் 100 கம்போர்ட் புதிய பிரீமியம் ஷேடுடன் சந்தைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பைக்கில் EcoThrust Fuel Injection டெக்னாலஜி (ETFI) பயன்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு ஏற்ற இந்த பைக்கில் மொபைல் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த பைக்கை எளிதாக ஆன் மற்றும் ஆஃப் செய்யலாம். இந்த டிவிஎஸ் பைக் 15 சதவீதத்திற்கும் அதிகமான மைலேஜ் தருவதாக கூறுகிறது. இதில் 4-ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது, இது 6,000 ஆர்பிஎம்மில் 4.4 பிஎஸ் ஆற்றலையும், 3,500 ஆர்பிஎம்மில் 6.5 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த டிவிஎஸ் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.46,671 ஆகும்.

TVS XL 100 Heavy Duty

டிவிஎஸ் எக்ஸ்எல் 100 ஹெவி டியூட்டி (TVS XL 100 Heavy Duty) ஆனது ETFi இன்ஜினையும் கொண்டுள்ளது. இந்த டிவிஎஸ் பைக்கில் 4-ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது, இது 6,000 ஆர்பிஎம்மில் 4.3 பிஎச்பி ஆற்றலையும், 3,500 ஆர்பிஎம்மில் 6.5 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.44,999 ஆகும். 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்கண்டவற்றை வாங்கலாம்.

ஹோண்டா ஆக்டிவா vs டிவிஎஸ் ஜூபிடர்: அதிக மைலேஜ்.. பெரிய ஸ்டோரேஜ் - எந்த ஸ்கூட்டர் சிறந்தது?

Latest Videos

click me!