Cheapest EV : வெறும் ₹5.2 லட்சத்துக்கு எலக்ட்ரிக் காரா? இதவிட பெஸ்ட் வேற எங்கயும் இல்ல!

Published : Jul 10, 2026, 10:26 AM IST

Cheapest EV : சீனாவின் வூலிங் நிறுவனம், உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் மிக மலிவான எலக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சுமார் ₹5.2 லட்சம் ஆரம்ப விலையில், 301 கி.மீ வரை ரேஞ்ச் தருகிறது இந்த குட்டி கார்.

PREV
15
அசத்தும் 'புஜ்ஜி' எலக்ட்ரிக் கார்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு வாகனங்கள் வாங்க நினைப்பவர்களின் பட்ஜெட்டைப் புரட்டிப் போடுகிறது. இதற்கிடையில், கார்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் கவலையைத் தருகிறது. இத்தகைய சூழலில், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஒரு சூப்பர் எலக்ட்ரிக் கார் கிடைத்தால் எப்படி இருக்கும்? உங்களுக்காகவே சீனாவைச் சேர்ந்த வுலிங் (Wuling) நிறுவனம் ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வந்துள்ளது.

உலக சந்தையில் புதிய ட்ரெண்டை உருவாக்கி, உலகின் மிக மலிவான எலக்ட்ரிக் காராகப் பெயர் பெற்ற 'வுலிங் ஹாங் குவாங் மினி ஈவி' (Wuling Hongguang Mini EV) தற்போது வாகனத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தினசரி நகரப் பயன்பாட்டிற்கும், சிறிய குடும்பங்களுக்கும் மிகவும் ஏற்றதாகக் கருதப்படும் இந்த 'குட்டி' காரின் சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம்.

25
சக்கரம் வைத்த ஸ்மார்ட்போன்!

இந்த காரைப் பார்த்தால், சக்கரம் வைத்த ஒரு பெரிய ஸ்மார்ட்போன் போலவே தோன்றும். நம் மொபைலை வீட்டில் சார்ஜ் செய்வது போல, இந்த காரையும் வீட்டு பிளக் பாயின்டில் எளிதாக சார்ஜ் செய்யலாம். பெட்ரோல் பங்க் செல்லும் வேலையும், பில் கவலையும் இல்லை. ஒரு பெட்ரோல் கார் 100 கி.மீ பயணிக்க சுமார் 8 லிட்டர் பெட்ரோல் தேவைப்படும். ஒரு லிட்டர் $1.50 (சுமார் ₹125) என்றால், மொத்த செலவு $12 (சுமார் ₹1,000). ஆனால், இந்த வூலிங் மினி இவி 10 kWh மின்சாரத்தில் 100 கி.மீ வேகம் செல்லும். ஒரு யூனிட் மின்சாரத்திற்கு $0.15 (சுமார் ₹12.50) என்று கணக்கிட்டால், 100 கி.மீ பயணிக்க ஆகும் செலவு வெறும் $1.50 (சுமார் ₹125) மட்டுமே. அதாவது, பெட்ரோல் காரை விட எட்டு மடங்கு செலவு குறைவு.

35
குறைந்த விலையில் அசத்தலான பவர் மற்றும் ரேஞ்ச்
இந்த காரின் புதிய மாடல் RMB 44,800 முதல் RMB 54,800 வரை விற்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ₹5.2 லட்சம் முதல் ₹6.4 லட்சம் வரை ஆகும். இதில் 30 kW திறன் கொண்ட பவர்ஃபுல் மோட்டார் உள்ளது, இது 42 ஹார்ஸ்பவர் சக்தியை அளிக்கிறது. நகர டிராஃபிக்கில் வெறும் 4.5 வினாடிகளில் 0-விலிருந்து 50 கி.மீ வேகத்தை எட்டிவிடும். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப 205 கி.மீ மற்றும் 301 கி.மீ என இரண்டு ரேஞ்ச் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும், DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம், வெறும் 35 நிமிடங்களில் பேட்டரியை 30% முதல் 80% வரை சார்ஜ் செய்ய முடியும்.
45
சிறிய அளவவில் பிரீமியம் அம்சங்கள்

பெரிய நகரங்களில் பார்க்கிங் ஒரு பெரும் சவால். ஆனால் இந்த குட்டி காரை நெருக்கமான இடங்களில்கூட எளிதாக பார்க் செய்யலாம். இதன் டர்னிங் ரேடியஸ் வெறும் 4.5 மீட்டர் மட்டுமே. வெளிப்புறத்தில் சிறியதாக இருந்தாலும், காருக்குள் நான்கு பேர் வசதியாக அமரலாம். 10.1-இன்ச் டச்ஸ்கிரீன், ரிமோட் ஏசி கண்ட்ரோல், பவர் விண்டோஸ், பேக்கப் கேமரா போன்ற நவீன அம்சங்களும் இதில் உள்ளன. வட்ட வடிவ LED ஹெட்லைட்கள் காருக்கு ஒரு ரெட்ரோ மற்றும் ஸ்டைலான தோற்றத்தைக் கொடுக்கின்றன.

Bike Tyres : டியூப் டயரா, டியூப்லெஸ் டயரா? உங்க பைக்குக்கு எது பெஸ்ட்?

55
பாதுகாப்பில் டாப்!

சிறிய கார்கள் என்றாலே பாதுகாப்பு குறைவாக இருக்குமோ என பலர் அஞ்சுவார்கள். ஆனால் வூலிங் நிறுவனம் இதில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இந்த காரின் பாடி 67% உயர்-வலிமை கொண்ட ஸ்டீலால் உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்காக முன்பக்க ஏர்பேக்குகள், டிஸ்க் பிரேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) போன்ற உயர்தர பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன. இதனால்தான், பட்ஜெட் விலையில், பாதுகாப்பான பயணத்தை வழங்கும் இந்த வூலிங் மினி இவி உலகளவில் அமோகமாக விற்பனையாகிறது.

Best Drivers : ஆண்களை விட பெண்களே பெஸ்ட் டிரைவர்கள்! பகீர் கிளப்பும் புதிய ஆய்வு!

Read more Photos on
click me!

Recommended Stories