இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, விலைகளை 1.29 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் எளிதாக நான்கு சக்கர வாகனங்களுக்கு மாறும் வகையில் சிறிய மாடல்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
மாருதியின் எந்த கார் எவ்வளவு மலிவானது?
எஸ் பிரஸ்ஸோ: 1,29,600 ரூபாய் வரை குறைப்பு
ஆல்டோ K10: 1,07,600 ரூபாய்
செலிரியோ: 94,100 ரூபாய்
வேகன்-ஆர்: 79,600 ரூபாய்
இக்னிஸ்: 71,300 ரூபாய்
ஸ்விஃப்ட், பலேனோ, ஃபிரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா போன்ற பிரீமியம் மாடல்களின் விலைகளில் 50,000 ரூபாய் முதல் 1,12,700 ரூபாய் வரை தள்ளுபடி.