இந்த ஆகஸ்ட் மாதம் Tata கார் வாங்கினால் லட்சம் ரூபாய் சேமிக்கலாம்!

Published : Aug 11, 2025, 01:44 PM IST

இந்த ஆகஸ்ட் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் பல பிரபலமான மாடல்களில் பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. Tiago, Punch, Harrier, Safari, Curvv போன்ற கார்கள் மீது கேஷ் தள்ளுபடி, எக்சேஞ்ச் ஆஃபர், ஸ்க்ராப் போனஸ் போன்ற சலுகைகள் உள்ளன.

PREV
15
டாடா கார் சலுகைகள்

டாடா மோட்டார்ஸ் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல பிரபலமான மாடல்களில் பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. Tiago, Punch, Harrier, Safari, Curvv போன்ற கார்கள் மீது கேஷ் தள்ளுபடி, எக்சேஞ்ச் ஆஃபர், ஸ்க்ராப் போனஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு மாதலுக்கும் சலுகை அளவு மாறுபடும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய வாகனம் வாங்க நினைப்பவர்கள் இம்மாதம் சிறந்த வாய்ப்பு பெறலாம்.

25
டாடா டியாகோ சலுகை

Tata Motors-இன் எண்ட்ரி லெவல் ஹாட்ச்பேக் Tiago-வின் XE மாடலை தவிர்த்து மற்ற அனைத்து வேரியண்ட்களிலும் ரூ.55,000 தள்ளுபடி கிடைக்கும். இதில் ரூ.10,000 கேஷ் தள்ளுபடி மற்றும் ரூ.15,000 வரை எக்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது.

35
டாடா பஞ்ச் சலுகை

Tata-வின் அதிகம் விற்கப்படும் SUV ஆன பஞ்ச்-இன் CNG வேரியண்டில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.85,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ.30,000 கேஷ் தள்ளுபடி உண்டு. பெட்ரோல் வேரியண்டில் ரூ.65,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

45
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி சலுகை

சமீபத்தில் டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி மாடல்களை அப்டேட் செய்திருந்தாலும், பழைய வேரியண்ட்களை வாங்கினால் பெரிய தள்ளுபடி கிடைக்கும். Harrier-In Smart மற்றும் Fearless வேரியண்ட்களில் ரூ.80,000 வரை, மற்ற வேரியண்ட்களில் ரூ.1.05 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். Safari பழைய வேரியண்ட்களிலும் இதே அளவு சேமிப்பு கிடைக்கும்.

55
Tata Curvv

Tata-வின் முதல் கூப் SUV ஆன Curvv-இல் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.30,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இது முழுவதும் எக்சேஞ்ச் மற்றும் ஸ்க்ராப் போனஸ் வடிவில் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, உங்கள் கனவு Tata காரை குறைந்த விலையில் வீட்டிற்கு கொண்டு செல்லலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories