450cc இன்ஜின், ஸ்போர்ட் சஸ்பென்ஷன்... ரூ.5.90 லட்சம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக்!

Published : Nov 10, 2026, 03:03 PM IST

பிஎம்டபிள்யூ மோட்டோராட் இந்தியா நிறுவனம், தனது பிரபல அட்வென்ச்சர் பைக் வரிசையில் புதிய 'பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் ஸ்போர்ட்' (BMW F 450 GS Sport) மாடலை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

PREV
14
பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் ஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் தனது புகழ்பெற்ற அட்வென்ச்சர் பைக் வரிசையை மேலும் வலுப்படுத்தும் வகையில், புதிய 'எஃப் 450 ஜிஎஸ் ஸ்போர்ட்' (BMW F 450 GS Sport) மாடலை பிஎம்டபிள்யூ மோட்டோராட் இந்தியா (BMW Motorrad India) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதல் ஸ்போர்ட்டியான தோற்றம், மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் களமிறங்கியுள்ள இந்த புதிய மாடலின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.90 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

24
கண்கவரும் தோற்றம் & அட்வென்ச்சர் வடிவமைப்பு

புதிய பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் ஸ்போர்ட் மாடல் பிரத்யேகமான 'ரேசிங் ரெட்' (Racing Red) வண்ணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரகாசமான சிவப்பு நிறம், பைக்கின் பாரம்பரிய 'ஜிஎஸ்' (GS) தோற்றத்தை தக்கவைத்துக்கொண்டே கூடுதல் ஸ்போர்ட்டி அழகைத் தருகிறது. பைக்கின் முன்பகுதியில் வெளிப்படையான கிளியர் ரேலி விண்ட்ஸ்கிரீன் (Clear Rallye Windscreen) & கருப்பு நிற ஹேண்ட் ப்ரொடெக்டர்கள் (Black Hand Protectors) கொடுக்கப்பட்டுள்ளன.

கரடுமுரடான சாலைகள் மற்றும் மணல் பாதைகளில் சிறப்பான கிரிப் தரும் ஆஃப்-ரோடு ஃபுட்ரெஸ்ட்கள் (Off-road footrests) மற்றும் இன்ஜினுக்குப் பாதுகாப்பளிக்கும் பிளாஸ்டிக் என்ஜின் கார்டு (Plastic engine guard) ஆகியவை இதில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

34
மேம்பட்ட சஸ்பென்ஷன் & ரைடிங் தொழில்நுட்பங்கள்

தோற்றத்தில் மட்டுமின்றி, சவாரி அனுபவத்தை மேம்படுத்தவும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பிஎம்டபிள்யூ வழங்கியுள்ளது. சிறந்த கையாளுமை மற்றும் வளைவுகளில் துல்லியமான கட்டுப்பாட்டை வழங்கும் வகையில் இந்த சஸ்பென்ஷன் அமைப்பு டியூன் செய்யப்பட்டு உள்ளது. கிளட்சைப் பயன்படுத்தாமலேயே கியர்களை மென்மையாகவும் வேகமாகவும் மாற்ற இந்த குவிக்-ஷிஃப்டர் வசதி உதவுகிறது. பல்வேறு வானிலை மற்றும் கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்ப பைக்கின் செயல்திறனை மாற்றியமைக்கும் பலதரப்பட்ட ரைடிங் மோடுகள் இதில் உள்ளன.

44
இன்ஜின் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்

இந்த பைக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட 450சிசி, டூ-சிலிண்டர் இன்-லைன் (Two-cylinder inline) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 48 ஹெச்பி (hp) பவரையும், 43 என்எம் (Nm) டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இது நகரப் போக்குவரத்து, நெடுஞ்சாலை நீண்ட பயணங்கள் மற்றும் ஆஃப்-ரோடு சவாரிகளுக்கு சமநிலையான ஆற்றலைத் தருகிறது. ஏபிஎஸ் ப்ரோ (ABS Pro), டைனமிக் டிராக்ஷன் கன்ட்ரோல் (Dynamic Traction Control), டைனமிக் பிரேக் கன்ட்ரோல் (Dynamic Brake Control) மற்றும் என்ஜின் டிராக் கன்ட்ரோல் (Engine Drag Control) போன்ற உயர்தர பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வழிசெலுத்தல் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதிகளைக் கொண்ட 6.5 இன்ச் டிஎஃப்டி (TFT) திரை மற்றும் மல்டி-கன்ட்ரோலர் இடம்பெற்றுள்ளது. மேலும், பிஎம்டபிள்யூவின் அடையாளமான 'X' வடிவ ஃபுல்-எல்இடி முகப்பு விளக்கு (X-shaped Full-LED headlight) மற்றும் முன்பக்க 'பீக்' (Beak) அமைப்பு இதற்கு அக்ரசிவ் அட்வென்ச்சர் லுக்கைத் தருகிறது. தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வசதிகள், நெடுஞ்சாலைகளுக்கான அசுர வேகம் மற்றும் ஆஃப்-ரோடு சாகசங்களை ஒரே பைக்கில் எதிர்பார்க்கும் ரைடர்களுக்கு இந்த புதிய பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் ஸ்போர்ட் ஒரு சிறந்த தேர்வாக அமையும்.

Read more Photos on
click me!

Recommended Stories