Blue Colour Number Plate
சாலைகளில் வாகனங்களில் பல வண்ணங்களின் நம்பர் பிளேட்களை பார்த்திருக்கலாம். வெள்ளை மற்றும் கருப்பு நம்பர் பிளேட்கள் மிகவும் பொதுவானவை. அவை சாமானியர்களுக்கானவை. மஞ்சள் மற்றும் கருப்பு நம்பர் பிளேட்டுகள் வணிக ரீதியில் இயங்கும் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற எண் நம்பர் பிளேட்டுகள் வழங்கப்படும்.
Number plates india
இந்த நம்பர் பிளேட்டுகள் தவிர, நீல நிற நம்பர் பிளேட்டும் உள்ளது. அதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கலாம். ஆனால், எந்தெந்த வாகனங்களுக்கு இந்த நீல நிற நம்பர் பிளேட் ஒதுக்கப்படுகிறது என்று தெரியுமா? இந்த தனித்துவமான நம்பர் பிளேட்டைப் பற்றிய இத்தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.
Number plate colour
நீல நிற நம்பர் பிளேட் யாருக்கு ஒதுக்கப்படுகிறது? வெளிநாட்டு தூதரகங்கள் அல்லது தூதரக வாகனங்களுக்கு நீல நிற நம்பர் பிளேட்டுகள் வழங்கப்படுகின்றன. தூதர்கள், தூதரக ஊழியர்கள் அல்லது சர்வதேச அமைப்புகளால் பயன்படுத்தப்படும் வாகனங்கள் நீல நிற நம்பர் பிளேட்டுகளைக் கொண்டிருக்கும்.
Blue number plate
நீல நிற நம்பர் பிளேட்டுகளில் எழுத்துக்கள் மற்றும் எண்கள் வெள்ளை நிறத்தில் பயன்படுத்துகின்றன. வாகனம் எந்த நாடு அல்லது நிறுவனத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் தனித்துவமான குறியீடும் இந்த நம்பர் பிளேட்டின் தொடக்கத்தில் இருக்கும். அதைத் தொடர்ந்து வாகன உரிமையாளரின் தரவரிசைக் குறியீடு இடம்பெறும்.
Blue Number Plates Purpose
இந்த வாகனங்கள் சர்வதேச சட்டங்களின் கீழ் உள்ளதால் சாதாரண இந்திய வரி விதிகளில் இருந்து இந்த வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. தூதரக வாகனங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு மற்றும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்திய போக்குவரத்து விதிகளில் சிறப்பு தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வெளிநாடுகளின் தூதரகங்கள் டெல்லி மற்றும் பிற மெட்ரோ நகரங்களில்தான் உள்ளன. இதனால், பெரும்பாலும் நீல நிற நம்பர் பிளேட்டுகள் கொண்ட வாகனங்களை அந்த நகரங்களில்தான் காண முடியும்.