* உங்கள் பைக் விபத்தில் சேதமடைந்து, பழுதுபார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டால்.
* தீ அல்லது வெடிவிபத்து காரணமாக உங்கள் பைக் சேதமடைந்தால்.
* உங்கள் டூ-வீலர் கலவரங்களால் சேதப்படுத்தப்பட்டால்.
* நிலநடுக்கம், சூறாவளி அல்லது வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் உங்கள் வாகனம் சேதமடைந்தால்.
* உங்கள் பைக் திருடு போனால்.
நீங்களே சேதம் ஏற்படுத்தினால் கிடையாது
ஒட்டுமொத்தத்தில் அன்றாட தேய்மானம் அல்லது நீங்களே வேண்டுமென்றே ஏற்படுத்தும் சேதங்களைத் தவிர, உங்கள் வாகனத்தில் திடீரென ஏதேனும் சேதம் ஏற்பட்டால், ஓன்-டேமேஜ் பைக் இன்ஷூரன்ஸ் பாலிசியை நீங்கள் க்ளைம் செய்யலாம். க்ளைம் அங்கீகரிக்கும் முறை சுமூகமாக நடக்க, க்ளைம் செய்யும்போது இந்த வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.