TVS Electric Scooter: ஓலா, ஏத்தர் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளித்து வரும் டிவிஎஸ், வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகன சந்தையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளது. 10 லட்சம் பேர் வாங்கிய ஸ்கூட்டரின் சூப்பர் அம்சங்களை பார்க்கலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் குறிப்பிடத்தக்க மயில்கல்லை எட்டியுள்ளது. அதன் பிரபலமான ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், மொத்தம் 10 லட்சம் விற்பனை என்ற சாதனையை பதிவு செய்துள்ளது. ஒரு காலத்தில் மின்சார வாகன சந்தையில் குறைந்த பங்கைக் கொண்டிருந்த டிவிஎஸ், இன்று முன்னணி நிறுவனங்களுக்கு நேரடி போட்டியை அளிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது.
26
சவால்களைத் தாண்டிய வளர்ச்சி
2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் சப்ளை செயின் சிக்கல்கள் எலக்ட்ரிக் வாகனத் துறையை பாதித்தபோதும், டிவிஎஸ் தனது வளர்ச்சியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது. நாடு முழுவதும் டீலர் வலையமைப்பை விரிவுபடுத்தியது, விற்பனைக்குப் பிந்தைய சேவையில் கவனம் செலுத்தியது போன்ற நடவடிக்கைகள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரித்தன.
36
வேகமெடுத்த விற்பனை
2025-ல் 3 லட்சம் விற்பனை மயில்கல்லை கடந்த நிறுவனம், அடுத்த சில மாதங்களிலேயே விற்பனை வேகத்தை பலமடங்கு உயர்த்தியது. 2026 மே மாதத்தில் மட்டும் 51,605 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி, நிறுவனத்தின் வரலாற்றிலேயே அதிகபட்ச மாதாந்திர விற்பனையாக பதிவு செய்யப்பட்டது.
இந்த ஸ்கூட்டரில் 2.2 கிலோவாட் மணி லித்தியம்-அயன் பேட்டரி மற்றும் 4.4 கிலோவாட் திறன் கொண்ட மின்மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. மணிக்கு 75 கிலோமீட்டர் வேகமும், முழு மின்னேற்றத்தில் 94 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறனும் உள்ளது. மேலும், 0 முதல் 80 சதவீதம் வரை மின்னேற்றம் பெற சுமார் 2 மணி 50 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
56
ஸ்மார்ட் அம்சங்களின் தொகுப்பு
5 அங்குல டிஜிட்டல் திரை, ப்ளூடூத் இணைப்பு, வழிகாட்டி வசதி, அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி அறிவிப்புகள், மென்பொருள் புதுப்பிப்பு போன்ற வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக, ஜியோஃபென்சிங், திருட்டு எதிர்ப்பு எச்சரிக்கை மற்றும் 30 லிட்டர் சேமிப்பு வசதி போன்ற அம்சங்களும் வாடிக்கையாளர்களை கவர்கின்றன.
66
மின்சார வாகன சந்தையின் அடுத்த கட்டம்
பெட்ரோல் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு காரணமாக, இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், டிவிஎஸ் ஐக்யூப்-ன் சாதனை, இந்திய மின்சார வாகன சந்தையின் வளர்ச்சி இன்னும் தொடக்க நிலையிலேயே இருப்பதையும், எதிர்காலத்தில் மிகப்பெரிய வாய்ப்புகள் காத்திருப்பதையும் வெளிப்படுத்துகிறது.