Budget EV Scooters: பெட்ரோல் டென்ஷன் வேணாம்.! 1 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் சூப்பர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.!

Published : Mar 27, 2026, 01:41 PM IST

Best Electric Scooters Under 1 Lakh : பெட்ரோல் விலை உயர்வு காரணமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாமானியர்களும் வாங்கும் வகையில் பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
18
Best Electric Scooters Under 1 Lakh

ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம் போன்ற காரணங்களால் எதிர்காலத்தில் இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சிறந்த தேர்வாக கருதுகின்றனர். இந்த பதிவில் ஒரு லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கும் சூப்பர் மாடல் எலக்ட்ரிக் பைக்குகள் குறித்து பார்க்கலாம்.

28
1. ஓலா S1 X (Ola S1 X)

ஓலா நிறுவனத்தின் மிகவும் மலிவான மாடல் இதுவாகும். பட்ஜெட் விலையில் அதிக வேகத்தையும், நவீன வசதிகளையும் எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த ரக வண்டி சிறந்த தேர்வாகும். பேட்டரி அளவைப் பொறுத்து இதன் விலை ரூ.70,000 முதல் ரூ.95,000 வரை நிர்ணயிக்கப்படுகிறது. இதன் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 101 கிலோமீட்டர். ஒருமுறை சார்ஜ் செய்தால் 95 கிலோ மீட்டர் முதல் 190 கிலோமீட்டர் (IDC) வரை செல்லும். 4.3 இன்ச் LCD டிஸ்ப்ளே, மொபைல் ஆப் கனெக்டிவிட்டி மற்றும் ரிவர்ஸ் மோட் ஆகியவை இதில் உள்ளது.

38
2. டிவிஎஸ் ஐகியூப் (TVS iQube - Base Variant)

டிவிஎஸ் ஐகியூப் நம்பகமான மற்றும் குடும்பத்துடன் பயன்படுத்துவதற்கு ஏற்ற ஸ்கூட்டராகும். இதன் விலை சுமார் ரூ.96,000 முதல் தொடங்குகிறது. மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 5 இன்ச் TFT திரை, மிகச்சிறந்த பில்ட் குவாலிட்டி மற்றும் விற்பனைக்கு பின்னர் சிறந்த சேவையை வழங்குகிறது. இது ஆறு வேரியண்ட்கள் மற்றும் 12 வண்ணங்களில் கிடைக்கிறது. ஒரே சார்ஜில் 212 கிலோ மீட்டர் வரை செல்லும் இந்த ஸ்கூட்டர், 4.4kW சக்தி வாய்ந்த மோட்டார் மற்றும் சிறந்த இணைப்பு அம்சங்களுடன் வருகிறது.

48
3. ஹீரோ விடா V1/VX2 (Hero Vida)

ஹீரோ நிறுவனத்தின் இந்த ஸ்கூட்டர்கள் நீக்கக்கூடிய பேட்டரி (Removable Battery வசதியுடன் வருகின்றன. இது அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு மிகவும் வசதியானது. இதன் விலை ரூ.96,000 வரை (மாடல்களைப் பொறுத்து) மாறுபடுகிறது. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். போர்டபிள் பேட்டரி, குரூஸ் கண்ட்ரோல் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகியவை இந்த வண்டியின் சிறப்பு அம்சமாகும்.

58
4.ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta)

ஏத்தர் நிறுவனத்தின் முதல் ஃபேமிலி ஸ்கூட்டர் ஏத்தர் ரிஸ்டா ஆகும். இதன் ரேஞ்ச் 159 கிலோமீட்டர் வரை உள்ளது. பெரிய சீட், ஸ்மார்ட் நேவிகேஷன், சாப்ட்வேர் அப்டேட்டுகள், மென்மையான சஸ்பென்ஷன் இதன் சிறப்பம்சமாகும். தினசரி அலுவலகம் செல்வதற்கு இது ஏற்றது. Skid கண்ட்ரோல், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், விழுந்தால் ஆப் ஆகும் வசதி மற்றும் ஆட்டோ ஹோல்டு வசதி உள்ளது.

68
5.யூலூ வின் (Yulu Wynn)

யூலூ வின் குறைந்த தூர பயணங்களுக்கு சிறந்த வாகனம் ஆகும். இதன் ரேஞ்ச் 68 கிலோ மீட்டர் ஆகும். எடை குறைவாகவும், பேட்டரியை கழற்றி வீட்டிலேயே சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது. மாணவர்கள் மற்றும் டெலிவரி ஊழியர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

78
6.ஆம்பியர் மேக்னஸ் EX (Ampere Magnus EX)

குறைந்த பராமரிப்பு மற்றும் எளிய பயன்பாட்டை விரும்புபவர்களுக்கு ஆம்பியர் மேக்னஸ் நல்ல தேர்வாகும். இதன் விலை சுமார் ரூ.85,000 முதல் ரூ.96,000 வரை. இதன் ரேஞ்ச் சுமார் 80 முதல் 100 கிலோமீட்டர் வரை ஆகும். அதிக இட வசதி கொண்ட சீட், USB சார்ஜிங் போர்ட் மற்றும் எளிய வடிவமைப்பு இதன் சிறப்பம்சமாகும்.

88
7.பஜாஜ் சேத்தக் 2901 (Bajaj Chetak 2901)

பஜாஜ் சேத்தக் 2901 பாரம்பரியமான மெட்டல் பாடி மற்றும் ஸ்டைலான தோற்றத்துடன் வரும் இந்த ஸ்கூட்டர் தற்போது பட்ஜெட் விலையிலும் கிடைக்கிறது. இதன் விலை சுமார் ரூ.96,000 முதல் ரூ.99,000 வரை. மணிக்கு 63 கிலோ மீட்டர் வேகத்திலும், 123 கிலோமீட்டர் ரேஞ்சிலும் செயல்படுகிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் இணைப்பு மற்றும் உறுதியான மெட்டல் பாடி இதன் சிறப்பம்சமாகும்.

குறிப்பு: மேலே உள்ள விலைகள் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே. உங்கள் ஊரின் சாலை வரி (RTO) மற்றும் இன்சூரன்ஸ் பொறுத்து ஆன்-ரோடு விலை சற்று மாறுபடலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories