எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதைவிட பெஸ்டா எங்கேயும் கிடைக்காது! இந்தியாவின் டாப் 10 லிஸ்ட் இதுதான்!

First Published Jan 22, 2024, 8:59 PM IST

வசதியான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனத்தை வாங்க விரும்பும் இளம் தலைமுறையினருக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சரியான தேர்வாக இருக்கும். அரசு மானியம் வழங்குவதால், கடந்த சில ஆண்டுகளில் மின்சார ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் சிறந்த பத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

1. Chetak Urbane 2024 Electric Scooter by Bajaj Auto

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இந்த Chetak Urbane ஸ்கூட்டர் ஸ்டைலான டிசைனுடன் 113 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கிறது. பல்வேறு பயன்பாடுகளுக்காக வண்ணமயமான டிஸ்பிளே இருக்கிறது. 3 வருட வாரண்டியுடன் கிடைக்கும்.

2. Ampere Electric Scooter Magnus EX Galactic Grey

ஆம்பியர் நிறுவனத்தின் மேக்னஸ் ஈ.எக்ஸ். (Magnus EX) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 112 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கக்கூடியது. 3 வருட வாரண்டியும் இருக்கிறது. 3 விதமான ரைடிங் மோட் இருந்தாலும் கலர் டிஸ்பிளே இல்லை. 22 லிட்டர் அளவு ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருக்கிறது.

3. EOX E1 Electric Scooter

EOX E1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வடிவமைப்பு கொண்டது. இதன் ரேஞ்ச் 80 கி.மீ. தான். ஒரு ஆண்டு வாரண்டி கொடுக்கப்படுகிறது. ரிவர்ஸ் வசதி, கலர் டிஸ்பிளே ஆகியவை இல்லை.

4. Yugbike Electric Scooter with Steel Guard

Yugbike நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 5-6 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். 50 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கிறது. சிங்கிள் டிஸ்க் பிரேக், ரிவர்ஸ் வசதி, 5 ஸ்டார் பாதுகாப்பு ஆகியவை உள்ளன.

5. Okaya FREEDUM Electric Scooter

ஒகாயா (Okaya) நிறுவனத்தின் FREEDUM எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பான வடிவமைப்புடன் 70-75 கி.மீ. ரேஞ்ச் அளிக்கிறது. வேகமான சார்ஜிங், முன்பும் பின்பும் டிரம் பிரேக்குகள், LED விளக்குகள், உறுதியான சஸ்பென்ஷன் சிஸ்டர் ஆகியவை உள்ளன. 3 ஆண்டுகள் வாரண்டியும் தரப்படுகிறது.

6. Ather 450X Gen 4

ஏதர் (Ather) நிறுவனத்தின் Ather 450X Gen மின்சார ஸ்கூட்டர் ஒரு முறை முழு சார்ஜ் செய்துவிட்டால் 150 கி.மீ. பயணிக்கக்கூடியது. 3.7kWh லித்தியம் அயர்ன் பேட்டரி இருக்கிறது. டிசைன், நவீன பேட்டரி தொழில்நுட்பம் காரணமாக Ather 450X Gen 4 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முன்னணியில் உள்ளது. 3 வருட வாரண்டியில் இந்த ஸ்கூட்டரை வாங்கலாம்.

7. Flex by Kinetic Green Electric Scooter

ஃப்ளெக்ஸ் (Flex) நிறுவனத்தின் Kinetic Green எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 120 கி.மீ. மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் திறன் படைத்தது. 120 கி.மீ ரேஞ்ச் கொடுக்கும் இந்த மின்சார ஸ்கூட்டர் பயன்படுத்த எளிமையான சிறிய அளவிலான சார்ஜருடன் கிடைக்கிறது. 3-4 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். வாரண்டி 3 ஆண்டுகள்.

8. Wroley 2 Wheeler Electric Scooter

Wroley 2 Wheeler எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 60V/30Ah லித்தியம் அயர்ன் பேட்டரி கொண்டது. வேகமான சார்ஜிங் வசதியும் இருக்கிறது. மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 75 சதவீதம் ரேஞ்ச் கொடுக்கும் இந்த ஸ்கூட்டர் 3 ஆண்டு வாரண்டியோடு விற்பனைக்கு உள்ளது.

9. EOX Delivery Electric Scooter

EOX Delivery எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிங்கிள் சார்ஜில் 80 கி.மீ. தூரம் செல்லக்கூடியது. LED டிஸ்பிளே, ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் கொண்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் இயங்கக்கூடியது. 5 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். வாரண்டி 3 ஆண்டுகள்.

10. Dolphin Electric Scooter Keagle

டால்ஃபின் (Dolphin) நிறுவனத்தின் Keagle நிறுவனம் 120 கி.மீ. ரேஞ்ச் தரும் கவர்ச்சிகரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். மணிக்கு 60 கி.மீ. வேகம் வரை செல்லலாம். தரம் மற்றும் பாதுகாப்புக்கான 5 ஸ்டார் ரேட்டிங், சிங்கிள் டிஸ்க் பிரேக், ரிவர்ஸ் வசதி ஆகியவற்றுடன் 4 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யும் அம்சமும் இருக்கிறது. 3 வருட வாரண்டியுடன் இந்த ஸ்கூட்டரை வாங்கலாம்.

click me!