Bamboo Petrol : இனி பெட்ரோல்-டீசல் வேண்டாம்... வரப்போகுது மூங்கில் பெட்ரோல்! ஒரு லிட்டர் 65 ரூபாய்தானா?

Published : Oct 23, 2026, 01:09 PM IST

Bamboo Petrol : மூங்கிலிலிருந்து வாகனங்களுக்கான திரவ எரிபொருளைத் தயாரிக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு லிட்டர் சுமார் ரூ.65 உற்பத்திச் செலவு, 26 மடங்கு குறைவான பசுமை இல்ல வாயு வெளியேற்றம் என ஆய்வு கூறும் தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

PREV
16
மூங்கிலில் இருந்து பெட்ரோல் தயாரிக்கலாமா?

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக இயற்கை வளங்களில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்போது மூங்கிலில் இருந்து திரவ எரிபொருளைத் தயாரிக்கும் சாத்தியம் குறித்த ஆய்வு கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் வொர்செஸ்டர் பாலிடெக்னிக் நிறுவனம் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள், மூங்கிலைக் கொண்டு குறைந்த பசுமை இல்ல வாயு வெளியேற்றத்துடன் எரிபொருள் தயாரிக்க முடியுமா என ஆய்வு செய்துள்ளனர். இந்தத் தொழில்நுட்பம் வணிக அளவில் வளர்ந்தால், எதிர்காலப் போக்குவரத்துத் துறையில் புதிய மாற்றத்துக்கு வழிவகுக்கலாம்.

இதையும் படிங்க : SIM Binding : ஜனவரி 1 முதல் WhatsApp, Telegram வேலை செய்யாது? ஏன் தெரியுமா?

26
மூங்கிலிலிருந்து எரிபொருள் எப்படி?

மூங்கிலில் உள்ள உயிரிப் பொருட்களை வெப்பம் மற்றும் அழுத்தத்தின் உதவியுடன் திரவமாக மாற்றும் முறையை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு நீர்வெப்ப திரவமாக்கல் எனப் பெயர். இந்தச் செயல்முறையில் மூங்கிலிலிருந்து உயிரி மூல எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இந்த எண்ணெயை அப்படியே வாகனத்தில் ஊற்றிப் பயன்படுத்த முடியாது. பெட்ரோல் அல்லது டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற எரிபொருளாக மாற்ற கூடுதல் செயலாக்கம் தேவை. எனவே, இது மூங்கிலிலிருந்து எரிபொருள் தயாரிப்பதற்கான சாத்தியத்தை ஆராயும் தொழில்நுட்பம்; தற்போது விற்பனையில் உள்ள மூங்கில் பெட்ரோல் அல்ல.

இதையும் படிங்க : 2027 Holidays : 2027-ல் எத்தனை அரசு விடுமுறைகள்? லாங் வீக்கெண்ட் எத்தனை? பொங்கல் முதல் தீபாவளி வரை முழு விவரம்!

36
ஒரு லிட்டர் ரூ.65 தானா?

இந்த ஆய்வில், பெரிய அளவிலான வணிக உற்பத்தி முழுமையாக வளர்ச்சியடைந்த நிலையில், மூங்கில் அடிப்படையிலான எரிபொருளின் விலை ஒரு கேலன் பெட்ரோலுக்குச் சமமான ஆற்றலுக்கு 2.75 அமெரிக்க டாலராக இருக்கலாம் எனப் பொருளாதாரக் கணிப்பு தெரிவிக்கிறது. இதை ஒரு லிட்டருக்குக் கணக்கிட்டால் சுமார் ரூ.65 என மதிப்பிடலாம். ஆனால், இது தற்போதைய சந்தை விலையோ பெட்ரோல் பங்க்கில் விற்கப்படும் விலையோ அல்ல. தொழிற்சாலையை அமைத்தல், இயக்குதல் உள்ளிட்ட செலவுகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட கணிப்பு மட்டுமே. உண்மையான விலை உற்பத்தி அளவு, செயலாக்கச் செலவு மற்றும் விநியோகத்தைப் பொறுத்து மாறலாம்.

இதையும் படிங்க : Train Ticket Rules : ஒரே டிக்கெட்டில் ஒருவருக்கு Confirmed, மற்றவருக்கு Waiting List! ரயிலில் பயணிக்கலாமா?

46
மாசு 26 மடங்கு குறையுமா?

ஆய்வின் வாழ்க்கைச் சுழற்சி மதிப்பீட்டின்படி, மூங்கில் எரிபொருளின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் வழக்கமான பெட்ரோலிய டீசலுடன் ஒப்பிடும்போது 26 மடங்கு குறைவாக இருக்கலாம். மூங்கில் வளரும்போது கார்பனைச் சேமிப்பதும், அதை எரிபொருளாக மாற்றும் செயல்முறையின் செயல்திறனும் இந்தக் கணக்கில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இருப்பினும், இது ஆய்வின் மதிப்பீடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எல்லா வகையான மாசுகளும் 26 மடங்கு குறையும் என்றோ, எந்தச் சூழலிலும் இதே முடிவு கிடைக்கும் என்றோ இதைப் புரிந்துகொள்ளக் கூடாது.

இதையும் படிங்க : Wedding Invitation : பழைய கல்யாணப் பத்திரிகைகளைத் தூக்கிப் போடாதீங்க! மீண்டும் பயன்படுத்த 10 ஐடியாக்கள்!

56
விவசாய நிலமும் மிச்சமாகுமா?

மூங்கிலின் முக்கியமான சிறப்புகளில் ஒன்று, அது வேகமாக வளரக்கூடிய தாவரம் என்பதுதான். அமெரிக்காவில் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் எரிபொருளுக்கு இணையான அளவை மூங்கிலிலிருந்து தயாரிக்க முடிந்தால், அதற்குத் தேவைப்படும் பயிரிடப்பட்ட நிலம் சுமார் 13 சதவீதமாக இருக்கலாம் என ஆய்வு கணித்துள்ளது. அதாவது, அதே அளவு எரிபொருளைத் தயாரிக்கக் குறைந்த நிலத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கலாம். மேலும், உணவுப் பயிர்கள் விளைவிக்க ஏற்ற நிலத்துடன் நேரடியாகப் போட்டியிடாத இடங்களிலும் மூங்கிலை வளர்க்கும் சாத்தியம் உள்ளது. ஆனால், இந்தக் கணிப்பு அமெரிக்காவின் எரிபொருள் உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டது.

இதையும் படிங்க : Bank Data Leak : 3.75 லட்சம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக்? உங்க வங்கிக் கணக்கு பாதுகாப்பா இருக்கா?

66
பெட்ரோல் பங்க்கில் எப்போது கிடைக்கும்?

மூங்கிலில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பம் ஆராய்ச்சி நிலையில் இருப்பதால், இது உடனடியாக பெட்ரோல், டீசலுக்கு மாற்றாகக் கிடைக்கப் போகிறது என்று கூற முடியாது. பெரிய அளவில் உற்பத்தி செய்வது, எரிபொருளின் தரத்தை உறுதிப்படுத்துவது, வாகனங்களில் பயன்படுத்துவதற்கான செயலாக்கத்தை மேம்படுத்துவது போன்ற பணிகள் இன்னும் தேவைப்படுகின்றன. மேலும், இந்த எரிபொருளைப் பயன்படுத்தும் காரின் மைலேஜ் எத்தனை கிலோமீட்டர் என்பது குறித்தும் இந்த ஆய்வு உறுதியான தகவலை வழங்கவில்லை. எதிர்காலத்தில் கனரக வாகனங்கள், ரயில்கள், விமானங்கள் போன்ற துறைகளில் குறைந்த கார்பன் எரிபொருளுக்கான ஒரு வாய்ப்பாக மூங்கில் அமையலாம்.

இதையும் படிங்க : Toll Plaza : இனி டோல்கேட்டில் நிற்க வேண்டாம்! FASTag முறை நீக்கப்படுகிறதா? முழு விவரம்!

Read more Photos on
click me!

Recommended Stories