பஜாஜ் கோகோ என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஆட்டோவை பஜாஜ் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஆட்டோ ஒருமுறை சார்ஜ் செய்தால் 248 கிமீ பயணிக்கும் திறன் கொண்டது.
நாட்டில் 3 சக்கர வாகனங்களின் தேவை மிகவும் வேகமா வளர்ந்து வருகிறது. குறிப்பா எலக்ட்ரிக் ஆட்டோ ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்த வந்துள்ளது. நாட்டில் பெரிய நிறுவனங்களும், சிறு மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இணைந்து இதனை பயன்படுத்திக் கொண்டுள்ளன. அந்த வகையில் பஜாஜ் புதிய கோகோ எலக்ட்ரிக் ஆட்டோவை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்திய சந்தையில் நீண்ட தூரம் ஓடக்கூடிய எலக்ட்ரிக் ஆட்டோவாக கோகோவை நிறுவனம் வெளியிட்டுள்ளது. பஜாஜ் கோகோ என புதிய பெயரில் நிறுவனம் வாகனத்தை வெளியிட்டுள்ளது. இந்த பெயரில், பேசஞ்சர், கார்கோ என 2 விதமாக எலக்ட்ரிக் ஆட்டோ வரும்.
25
நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற ஆட்டோ
பஜாஜ் ஆட்டோவின் இன்ட்ரா சிட்டி பிசினஸ் யூனிட் பிரசிடென்ட் சமர்தீப் சுபந்த் கூறுகையில், பஜாஜ் கோகோ சீரிஸ்ல இருக்குற ஆல்-எலக்ட்ரிக் த்ரீ வீலர் லான்ச் இந்த செக்மென்ட்க்கு புது ரூல்ஸ் உண்டாக்கும். 251 கிலோமீட்டர் வரைக்கும் ரேஞ்ச், செக்மென்ட்ல ஃபர்ஸ்ட் ஃபீச்சர்ஸ், பஜாஜ் நம்பிக்கை, சர்வீஸ் இதெல்லாம் சேர்ந்து, வருமானத்த அதிகமாக்கவும், டவுன்டைம், ரிப்பேர் தொல்லைய குறைக்கவும் நினைக்கிற கஸ்டமர்ஸுக்கு பஜாஜ் கோகோ ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என நிறுவனம் உறுதி அளிக்கிறது.
35
பஜாஜ் எலக்ட்ரிக் ஆட்டோ
முதலில், P4P5009, P7012 மாடல் சந்தையில் வந்துள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 3,26,797 ரூபாய் முதல் 3,83,004 ரூபாய் வரை உள்ளது. இதனை நீங்கள் பஜாஜ் ஆட்டோ டீலர்ஷிப்பில் புக் செய்யலாம். பெர்ஃபார்மன்ஸ், டாப் ரேஞ்ச்ல் இருக்கின்ற பஜாஜ் கோகோ P7012ல் 7.7 bhp பவரும், 36 Nm பீக் டார்க் தரக்கூடிய மோட்டார் உள்ளது. P7012ல் 12 kWh பேட்டரி பேக் மட்டும்தான் உள்ளது. இந்த வேரியண்ட் 251 கிலோமீட்டர் வரைக்கும் மைலேஜ் கிடைக்கும். ஈக்கோ, பவர், க்ளைம்ப், பார்க் அசிஸ்ட்ன்னு டிரைவ் மோடும் உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 mm, டாப் ஸ்பீடு மணிக்கு 50 km, கிரேடபிலிட்டி 27.8% உள்ளது.
45
எலக்ட்ரிக் ஆட்டோ
டூ-ஸ்பீடு ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஷன், ஆட்டோ ஹசார்ட், ஆன்டி-ரோல் டிடெக்ஷன், பவர்ஃபுல் எல்இடி லைட்ஸ், ஹில் ஹோல்டு அசிஸ்ட் இவை அனைத்தும் பஜாஜ் கோகோ ஆட்டோவில் உள்ள ஸ்பெஷல் ஃபீச்சர்ஸ். இந்த பிராண்ட் மூலம் எலக்ட்ரிக் த்ரீ-வீலர் செக்மென்டில் நம்மை இன்னும் பலப்படுத்தலாம் என பஜாஜ் சொல்கிறது. P5009, P5012, P7012ன்னு மூணு வேரியண்ட்களில் பஜாஜ் கோகோ கிடைக்கும். இந்த வேரியண்டில் P பேசஞ்சர் வேரியண்டை குறிக்கிறது. 09, 12 ரெண்டும் 9 kWh, 12 kWh பேட்டரி கெபாசிட்டியை குறிக்கிறது. அதாவது, P5009ல் 9 kWh பேட்டரி உள்ளது, அதே போன்று P7012ல 12 kWh பேட்டரி உள்ளது. பேட்டரி பெரிதாக இருந்தால் ரேஞ்ச் கூடும்.
55
பஜாஜ் ஆட்டோ
இன்னும் அதிகமான ஃபீச்சர்ஸ் வேண்டும் என நினைக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு, ரிமோட் இம்மொபிலைசேஷன், ரிவர்ஸ் அசிஸ்ட், இன்னும் நிறைய புது ஃபீச்சர்களோடு பிரீமியம் டெக் பேக் கிடைக்கும். கடந்த 3 வருடங்களில் இந்தியாவில் எலக்ட்ரிக் த்ரீ-வீலர் செக்மென்ட் 30% வளர்ந்து உள்ளது. அரசு அதிகமான திட்டங்களை வெளியிட்டதாலும், இ-வாகனம் பராமரிப்பு செலவு குறைவாக இருப்பதாலும் இது நடந்துள்ளது. தற்போது உள்ள இ-ஆட்டோ சீரிஸ்ல் முதல் வருடத்திலேயே எலக்ட்ரிக் த்ரீ-வீலரில் டாப் 2 நிறுவனங்களில் ஒன்றாக பஜாஜ் ஆட்டோ வளர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.