பஜாஜின் இந்த புதிய இ-ஸ்கூட்டர் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை இடைவிடாமல் சிறந்த ரேஞ்சை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலையால் மின்சார இரு சக்கர வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருபுறம், மின்சார ஸ்கூட்டர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை ஆகும். மிகக் குறைந்த செலவில் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று வணிக நோக்கில் மின்சார ஸ்கூட்டர் மீது மக்களின் நாட்டம் அதிகரித்து வருகிறது.
24
Bajaj
பஜாஜ் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்குப் பிறகு, பஜாஜ் மற்றொரு இ-ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகப்படுத்தப் போகிறது. புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு தோற்றத்தில் ஸ்டைலிஷாக இருக்கிறது. பஜாஜின் புதிய இ-ஸ்கூட்டரில் லித்தியம் அயன் பேட்டரி இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஸ்கூட்டர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3 முதல் 4 மணி நேரம் ஆகும்.
34
Electric Scooters
ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த ஸ்கூட்டர் இடைவிடாமல் 150 கிமீ வரை சிறந்த ரேஞ்சை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இ-ஸ்கூட்டரில் புளூடூத் இணைப்பு, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த சக்திவாய்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 1 லட்சத்து 40 ஆயிரம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.
44
Blade Electric Scooter Price
புதிய பஜாஜ் பிளேட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதன் நவீன வடிவமைப்பு மற்றும் ஸ்டைலான தோற்றம் காரணமாக இளைய தலைமுறையினர் மத்தியில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. இந்த ஸ்கூட்டர் சந்தையில் உள்ள மற்ற ஸ்கூட்டர்களை விட பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. எனவே பஜாஜ் பிளேட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் பெரிய ஹிட் அடிக்கும் என்று நம்பப்படுகிறது.