Best Mileage Car: நாட்டில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப கார் நிறுவனங்கள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. மேனுவல் கார்களுடன் ஆட்டோமேட்டிக் கியர் மாற்றும் கார்களும் உள்ளன. சிறப்பம்சங்கள் அதிகரிக்கும் போது, இன்ஜின் திறனும் அதிகரிக்கிறது. இது பெட்ரோல் பயன்பாட்டை பாதிக்கும். பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர் கார்கள் எவ்வளவு மைலேஜ் தருகின்றது என்று பார்ப்போம்!
ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கார்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இந்த இரண்டு வகையான கார்களும் அவற்றின் சொந்த நன்மை தீமைகளைக் கொண்டுள்ளன. எது அதிக செலவாகும்? எது அதிக பெட்ரோல் குடிக்கிறது? அதைச் சொல்வதற்கு முன், இந்த வேறுபாடு என்னவென்று பார்ப்போம்.