Renault Kiger: ரூ.1.46 லட்சம் வரை விலை குறைப்பு! மிரட்டலாக என்ட்ரி கொடுத்த புதிய 2026 ரெனால்ட் கைகர்!

Published : Jun 26, 2026, 12:36 PM IST

Renault: ரெனால்ட் தனது பிரபலமான கைகர் எஸ்யூவியில் ஒரு புதிய அப்டேட்டைக் கொண்டுவந்துள்ளது. டர்போ இன்ஜின் கொண்ட மாடல்களை குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதமாக அறிமுகம் செய்துள்ளது.

PREV
15
ரெனால்ட் கைகர்

பிரான்ஸ் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் இந்திய வாகனச் சந்தையில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது புகழ்பெற்ற சப்-காம்பாக்ட் எஸ்யூவி மாடலான ரெனால்ட் கைகர் (Renault Kiger) காரின் டர்போ பெட்ரோல் வேரியன்ட்களை, வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த விலையில் வாங்கும் வகையில் புதிய 'எவல்யூஷன் டர்போ' வேரியன்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள புதிய அம்சங்கள் மற்றும் விலை விபரங்களுடன் மாற்றியமைக்கப்பட்ட கைகர் 2026 சீரிஸ் குறித்த முழு விபரம் குறித்த தகவலை பார்க்கலாம்.

25
புதிய எவல்யூஷன் டர்போ

இதற்கு முன்னதாக ரெனால்ட் கைகரில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் வேரியன்ட் வாங்க வேண்டும் என்றால் ஆரம்ப விலையே ரூ.9.33 லட்சமாக இருந்தது. ஆனால், தற்போது அறிமுகமாகியுள்ள புதிய எவல்யூஷன் டர்போ வேரியன்ட்டின் ஆரம்ப விலை ரூ.7.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மட்டுமே. இதன் மூலம் டர்போ இன்ஜின் காரின் விலை ரூ.1.46 லட்சம் வரை குறைந்துள்ளது.

35
எவல்யூஷன் ப்ளஸ்

டர்போ இன்ஜின் தேவையில்லை என்பவர்களுக்காக 1.0 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய இந்த ட்ரிம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.6.99 லட்சம் ஆகும்.

டெக்னோ டர்போ மேனுவல்

இந்த புதிய 2026 சீரிஸில் டெக்னோ டர்போ வேரியன்ட்டிற்கு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.8.45 லட்சம். இது சிவிடி (CVT) ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டை விட சுமார் ரூ.90,000 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

45
அசத்தலான புதிய பிரீமியம் அம்சங்கள்

புதிய எவல்யூஷன் ப்ளஸ் மற்றும் டர்போ வேரியன்ட்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ஏகப்பட்ட பிரீமியம் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. எல்இடி டிஆர்எல் (LED DRLs), எல்இடி டெயில்லேம்ப்ஸ், எல்இடி ஹெட்லேம்ப்கள், 16 இன்ச் ஃப்ளெக்ஸ் வீல்கள் மற்றும் அட்ஜஸ்டபிள் ORVM-கள். 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட். புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட்.

55
பர்ஃபாமன்ஸ் மற்றும் இடவசதி

ரெனால்ட் கைகர் தனது செக்மென்ட்டிலேயே சிறந்த பர்ஃபாமன்ஸ் மற்றும் இடவசதியைக் கொண்டுள்ளது. டர்போ வேரியன்ட்களில் சிறந்த 'டார்க்-டு-வெயிட்' ரேஷியோ உள்ளதால், மிகக் குறைந்த நொடிகளிலேயே 0-100 கி.மீ வேகத்தை எட்டிவிடுகிறது. இந்திய சாலைகளுக்கு ஏற்ற 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 405 லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் கேபினுக்குள் 29 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. பின்பக்க பயணிகளுக்கு 222 மிமீ லெக்ரூம் (Knee space) மற்றும் முன்பக்க பயணிகளுக்கு 710 மிமீ இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது, இது இந்த செக்மென்ட்டிலேயே மிக அதிகம்.

Read more Photos on
click me!

Recommended Stories