நகர் போக்குவரத்திலோ, புறநகர் சாலைகளிலோ, கிராமப்புறங்களில் கூட இது சிறப்பாக செயல்படும். இதில் 1.8 kWh திறன் கொண்ட போர்டபிள் LFP பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ வரை பயணிக்க முடியும். இதன் 1.5 kW மோட்டார் மற்றும் 55 கி.மீ/மணி வேகம், பலவகையான இந்திய சாலைகளில் திறமையான ஓட்டத்தை வழங்குகிறது.
இந்த ஸ்கூட்டரில் சேர்க்கப்பட்டுள்ள பிரிவில் முதன்மையான அம்சங்கள் தான் இதன் சிறப்பம்சம்:
- Hill Hold Control – மலை சாரி சாலைகளில் ஸ்கூட்டர் பின்னோக்கி செல்லாமல் தடுக்கும்
- Cruise Control – நீண்ட பயணங்களில் ஸ்மூத் ஓட்டத்திற்கு உதவுகிறது
- Follow-Me-Home ஹெட்லைட்கள் – இருட்டில் வழி காட்டும்
- USB சார்ஜிங் போர்ட், போர்ட்பிள் பேட்டரி என பயனர்களுக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.