Cheapest Budget Cars : மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு ஏற்ற குறைந்த பட்ஜெட் கார்கள்.. விலை எவ்வளவு தெரியுமா?

First Published | Aug 27, 2024, 7:36 PM IST

Top 5 Cheapest Budget Car : மாருதி சுஸுகி, ஹூண்டாய், கியா, ஸ்கோடா மற்றும் நிசான் போன்ற வாகன உற்பத்தியாளர்கள் புதிய எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்த உள்ளனர். அவை மிடில் கிளாஸ் மக்கள் விரும்பும் பட்ஜெட்டிற்குள் இருக்கும் காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Skoda Kylaq

மார்ச் 2025 இல் அறிமுக இருக்கும் ஸ்கோடாவின் கைலாக் பெரிதும் குஷாக்குடன் ஒத்துப்போகும் அம்சங்களைக் கொண்ட எஸ்யூவியாக இருக்கும். இது 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும். குஷாக் போலவே 115 PS மற்றும் 178 Nm முறுக்குவிசையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

New Gen Hyundai Venue

2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், ஹூண்டாய் நிறுவனம், இந்தக் காரை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். ஹூண்டாய் வென்யூவின் இரண்டாம் தலைமுறை மாடலான இது, வடிவமைப்பு மற்றும் வசதிகளில் அப்டேட்டுகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos


Kia Syros

கியா சிரோஸ் கிளாவிஸ் சோனெட் மற்றும் செல்டோஸுக்கு இடைபட்ட மாடலாக இருக்கலாம். எனக் கூறப்படுகிறது. 2025இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் சோனெட் போலவே இருக்கக்கூடும். இந்த SUV தனித்துவமான வடிவமைப்புடன் பெரிய டிச் ஸ்கிரீன், டிஜிட்டல் கிளஸ்டர், ADAS, சன்ரூஃப் போன்ற அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படலாம்.

Nissan Magnite Facelift

நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. எனவே இந்த எஸ்யூவி இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெளிப்புறமும் உட்புறமும் அப்டேட் இருக்கும். பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் மாற்றம் இருக்காது எனக் கூறப்படுகிறது.

Maruti Suzuki Fronx Facelift

மாருதி சுஸுகி போர்ன்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் 2025ஆம் ஆண்டின் மத்தியில் வந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது. இது ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்சினுடன் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

click me!