இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் டாப் 5 பைக்குகள் என்னென்ன தெரியுமா.?

Published : Jan 25, 2024, 02:51 PM ISTUpdated : Jan 25, 2025, 02:06 PM IST

குடியரசு தின விழா நாளை (ஜனவரி 26ஆம் தேதி) கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இந்நிய ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் பைக்குகள் எவை என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

PREV
15
இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் டாப் 5 பைக்குகள் என்னென்ன தெரியுமா.?
Royal Enfield Bullet 350

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கின் 4-ஸ்ட்ரோக் மாடல்கள்தான் ஆரம்ப காலத்தில் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலான பைக்குகள் லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அவை சென்னையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன.

25
Royal Enfield Bullet 350

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பின்னர் 500சிசி மாடலாக மாற்றப்பட்டது. இந்த பைக்குகள் கடுமையான சூழ்நிலையிலும் ஓட்டக்கூடிய ஆற்றல் கொண்டது.

35
Yamaha RD350

யமஹா RD350 பைக்குகள் ஒரு காலத்தின் புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாக இருந்தது. விலை அதிகமாக இருந்தாலும் சில RD 350 பைக்குகள் இந்திய ராணுவத்தில் சில ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

45
Jawa

இந்திய இராணுவம் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பிரத்தியேகமாகப் பயன்படுத்தினாலும், சில பழைய ஜாவா பைக்குகளும் கடற்படையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

55
Royal Enfield Himalayan 411

இந்திய ராணுவம் சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 411 பைக்கை வாங்கியிருக்கிறது. கரடுமுரடான மற்றும் சவாலான நிலப்பரப்புகளில், குறிப்பாக மலைகளில் பயணம் செய்ய இந்த பைக்குகள் சிறந்தவை.

click me!

Recommended Stories