இந்திய வாகனச் சந்தையில் மின்சார வாகனங்களின் வரவேற்பு அதிகரித்து வருவதால், இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் மலிவு விலை மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர். அன்றாட பயணங்களுக்கு ஏற்றதாகவும், எரிபொருள் சிக்கனமாகவும், நவீன வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களுடன் கூடியதாகவும் இந்த ஸ்கூட்டர்கள் இருக்கும். விரைவில் அறிமுகமாகவுள்ள நான்கு மலிவு விலை மின்சார ஸ்கூட்டர்கள் குறித்த முக்கிய தகவல்கள் இங்கே.
ஹீரோ விடா VX2
2025 ஜூலை 1 அன்று அறிமுகமாகவுள்ள ஹீரோ விடா VX2, மலிவு விலை மின்சார ஸ்கூட்டராக இருக்கும். 2024 EICMA-வில் காட்சிப்படுத்தப்பட்ட விடா Z-ஐ அடிப்படையாகக் கொண்டது. விடா V2-ல் உள்ள சில அம்சங்கள் VX2-ல் இருக்காது. V2 தற்போது V2 ப்ரோ, V2 பிளஸ், V2 லைட் என மூன்று வகைகளில் கிடைக்கிறது.