Tata Nano Electric Car
உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை மிக வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மலிவான எலக்ட்ரிக் கார் என்ற பெயருக்கு பொருத்தமாக இதுவரை எந்த காரும் வெளிவரவில்லை. அதை போக்கும் வகையில் டாடா நானோ எலக்ட்ரிக் கார் வருகிறது.
Tata Nano EV
டாடா நானோ எலக்ட்ரிக் காரில் உள்ள அனைத்து மேம்பட்ட அம்சங்களைப் பற்றி பார்க்கையில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டச் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவற்றை கொண்டுள்ளது.
Nano Electric Car
மேலும் 360 டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார்கள், டிஸ்க் பிரேக், ஹெட்லைட், எல்இடி போன்ற பல அம்சங்களை இந்த காரில் நீங்கள் பெறுவீர்கள். டாடா நானோ எலக்ட்ரிக் காரின் எஞ்சின் ஆனது 19 kWh தவிர, இந்த காரில் 24 kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் விருப்பமும் உங்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
Ratan Tata
இதன்படி, இந்த காரில் செயல்திறனுக்கான சக்திவாய்ந்த மின்சார மோட்டாரையும் நீங்கள் காண்பீர்கள். பேட்டரி பேக் மூலம் 250 கிமீ ரேஞ்சையும் தரும். இது பெரிய பேட்டரி பேக்குடன் 315 கிமீ ரேஞ்சையும் தரும். டாடா நானோ எலக்ட்ரிக் கார் ஆனது நல்ல மைலேஜ் கொடுக்கிறது.