ஸ்கோடா இந்தியா தனது 2026 குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல் டிசைன், ஃபீச்சர்கள், மற்றும் எஞ்சினில் பல அப்டேட்களுடன் வருகிறது. பேஸ் வேரியன்ட்டிலேயே பல பிரீமியம் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஸ்கோடா இந்தியா தனது 2026 குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய குஷாக்-ல் டிசைன், ஃபீச்சர்கள், எஞ்சின் மற்றும் டிரைவ்ட்ரெயின் போன்ற பல முக்கிய அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. 2026க்காக வேரியன்ட் லைனப்பும் புதுப்பிக்கப்பட்டு, வாங்குபவர்களுக்கு அதிக தேர்வுகள் கிடைக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் தற்போது Classic Plus, Signature, Sportline, Prestige, Monte Carlo என மொத்தம் 5 வேரியன்ட்களில் வருகிறது.
24
குஷாக் பேஸ் வேரியன்ட் ஃபீச்சர்கள்
இதில் ஆரம்ப வேரியன்ட் ஆன Classic Plus, 1.0 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கிறது. முன்பு இருந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை மாற்றி, இப்போது புது 8-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் ஸ்கோடா வழங்கியுள்ளது. இதன் மூலம், இந்த பேஸ் வேரியண்டிலேயே மெனுவல் + ஆட்டோமேட்டிக் இரண்டு தேர்வுகளும் கிடைக்கின்றன. கூடவே, சிங்கிள்-பேன் எலக்ட்ரிக் சன்ரூஃப், 16-இஞ்ச் அலாய் வீல்ஸ், LED ஹெட்லைட் & டெயில் லைட்ஸ் போன்ற பிரீமியம் அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
34
குஷாக் வேரியன்ட் லிஸ்ட்
இதனால் பேஸ் வேரியன்ட் என்றாலும் கார் லுக் மற்றும் ஃபீல் அதிகமாக அப்டேட் ஆனதாக தெரிகிறது. இன்ஃபோடெயின்மென்டிற்காக 6.9-இஞ்ச் டச்ஸ்க்ரீன், ஸ்பீக்கர்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், சீக்வென்ஷியல் ரியர் இண்டிகேட்டர்கள் போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன. மேலும், வாடிக்கையாளர்களுக்கு விருப்பமாக பிரண்ட் பார்கிங் சென்சார்கள் ஆப்ஷன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதோடு ரெயின்-சென்சிங் வைப்பர்ஸ், ரியர் வைப்பர், டிஃபாகர் ஆகியனவும் ஸ்டாண்டர்டாக தரப்படுகிறது.
பாதுகாப்பு அம்சங்களில் Classic Plus வேரியன்ட் அம்சம் குறைவாக இல்லை. இதில் 6 ஏர்பேக்ஸ் மற்றும் 25க்கும் மேற்பட்ட ஆக்டிவ்/பாசிவ் சேஃப்டி ஃபீச்சர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியன்ட்களில் 40+ பாதுகாப்பு அம்சங்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், 2026 குஷாக் மாடல் குளோபல் NCAP 5-ஸ்டார் ரேட்டிங் பெற்றிருப்பது கூடுதல் நம்பிக்கை தருகிறது. அதிகாரப்பூர்வ விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இதன் ஆரம்ப விலை ரூ.11–12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அருகில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.