6 ஸ்பீடு கியர் பாக்ஸ்களுடன் கவாஸ்கி நிஞ்சா 1100 SX! ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களுக்கு செம ட்ரீட்!

First Published | Oct 3, 2024, 12:00 PM IST

ஜப்பானிய ஸ்போர்ட்ஸ் டூரிங் பைக் நிறுவனமான கவாஸ்கி 2025 Kawasaki Ninja 1100 SX பைக்கை அறிமுகம் செய்துள்ளது. பல அப்டேட்களுடன் சர்வதேச சந்தையில் வெளியாகியுள்ள இந்த பைக் ஸ்டாண்டர்ட் மற்றும் SE என இரண்டு டிரிம்களில் கிடைக்கிறது.

2025 Kawasaki Ninja 1100 SX

புதிய கவாஸ்கி நிஞ்ஜா 1100 SX (2025 Kawasaki Ninja 1100 SX) 1099சிசி, லிக்விட்-கூல்டு, இன்லைன்-ஃபோர் இன்ஜினைப் பெற்றுள்ளது. இது 9,000 ஆர்பிஎம்மில் 136 பிஎச்பி பவரையும், 7,600 ஆர்பிஎம்மில் 113 என்எம் ஆற்றலையும் உருவாக்குகிறது. இந்த எஞ்சின் ஆறு-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 1,500 ஆர்பிஎம்மில் இருந்து செயல்படும் புதுப்பிக்கப்பட்ட ஸ்பீடு ஷிஃப்டரும் உள்ளது.

2025 Kawasaki Ninja 1100 SX

rpm வரம்பில் முறுக்கு வளைவை மேம்படுத்தும் வகையில் எஞ்சினை டியூன் செய்திருப்பதாக கவாஸாகி கூறுகிறார். நெடுஞ்சாலையில் செல்லும் போது அமைதியான பயண அனுபவத்தைத் தக்கவைக்க ஐந்தாவது மற்றும் ஆறாவது கியர்கள் சற்று உயரமாக உள்ளன.

Latest Videos


2025 Kawasaki Ninja 1100 SX

வெளித்தோற்றத்தில் 2025 மாடலுக்கும் முந்தைய மாடலுக்கும் வேறுபாடு ஏதும் இல்லை. பக்கவாட்டில் ட்வின் எல்இடி ஹெட்லைட்கள் உள்ளன. டெயில் லைட்டிலும் ட்வின் எல்இடி கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. SE டிரிமில், கோல்டு மற்றும் கருப்பு நிற கிராபிக்ஸ் உள்ளது. பைக்கின் பச்சை நிறத்துடன் வேறுபடும் அம்சம் இது ஒன்றுதான்.

2025 Kawasaki Ninja 1100 SX

புதிய, பெரிய பின்புற டிஸ்க் பிரேக் உள்ளது. Kawasaki Ninja 1100 SX SE முன்பக்கத்தில் Brembo Monobloc 4.32 காலிப்பர்களைப் பெறுகிறது. Ohlins S36 அட்ஜஸ்டபிள் மோனோஷாக் உள்ளது. இது முந்தைய மாடலில் இல்லை. புதிய பிரிட்ஜ்ஸ்டோன் Battlax S23 டயர்கள் 17 இன்ச் அளவுள்ளவை.

2025 Kawasaki Ninja 1100 SX

​​நிஞ்ஜா 1100 SX மிகவும் பல கவர்ச்சிகரமான அம்சங்களைக் கொண்டது. LED விளக்குகள், புளூடூத் இணைப்புடன் கூடிய TFT டிஸ்ப்ளே, பவர் மோடுகள், டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ் மற்றும் USB-C சார்ஜிங் போர்ட் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. SE வேரியண்ட்டில் ஹீட்டட் கிரிப்கள் இருக்கின்றன.

2025 Kawasaki Ninja 1100 SX

சர்வதேசச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2025 கவாஸாகி நிஞ்ஜா 1100 எஸ்எக்ஸ் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை டிசம்பரில் நடைபெறும் இந்தியா பைக் வீக் நிகழ்ச்சியில வெளியிடப்படலாம் எனக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!