4,488 மிமீ நீளமும், 1,884 மிமீ அகலமும், 1,625 மிமீ உயரமும் கொண்ட எல்ரோக் 2,765 மிமீ நீளமான வீல்பேஸைக் கொண்டுள்ளது. இது 1,949 கிலோ எடை கொண்டது. டிமியானோ கிரீன் உட்பட ஒன்பது வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. "ஏரோ-ஆப்டிமைஸ்டு" வடிவமைப்பு கொண்ட சக்கரங்களின் அளவு மாடலுக்கு ஏற்ப 19 முதல் 21 இன்ச் வரை மாறுபடும். பின்புறத்தில், டெயில்லைட் ஸ்கோடாவின் மற்ற மாடல்களில் உள்ள வடிவமைப்பைப் போல உள்ளது.