zodiac signs : அன்பை சரியாக வெளிப்படுத்த தெரியாத ராசிக்காரர்கள் இவங்க தானாம்

Published : Aug 10, 2026, 01:55 PM IST

வெளிப்படையாகப் பேசத் தெரியாததால், மனதிற்குள் மலையளவு அன்பை வைத்துக்கொண்டும் உறவுகளில் "அன்பில்லாதவர்கள்" எனத் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் ராசிக்காரர்கள் பற்றித் தெரியுமா? அவர்களின் உண்மையான அன்பைப் புரிந்துகொள்ள இந்தத் தொகுப்பைப் படியுங்கள்!

PREV
16
அன்பை வெளிப்படுத்த தெரியாத ராசிக்காரர்கள் :

மனதில் ஆழமான அன்பு இருந்தும், அதை வெளியே காட்டத் தெரியாமல் "கடுமையானவர்கள்" என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படும் மனிதர்கள் நம்மிடையே ஏராளம். ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்களின் அமைப்பும் ராசியின் அதிபதிகளும் ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மையை தீர்மானிக்கின்றன. சில ராசிக்காரர்கள் அன்பை வார்த்தைகளால் கொட்டுவதை விட, செயல்களாலும் பொறுப்புகளாலும் வெளிப்படுத்தவே விரும்புவார்கள். அப்படி மனதிற்குள் அனைவரிடமும் அதிக அளவில் பாசத்தை தேக்கி வைத்துக் கொண்டு, ஆனால் "அன்பை சரியாக வெளிப்படுத்தத் தெரியாத" காரணத்தால் பாசமே இல்லாத மனிதர்கள், கடுமையானவர்கள் என பெயரெடுத்து அதனால் மன வேதனைக்கு உள்ளாகும் 5 ராசிக்காரர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

26
மகரம் :

சனி பகவானை அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்கள், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் மிகவும் தயக்கம் காட்டுபவர்கள். இவர்களுக்கு "ஐ லவ் யூ" என்று சொல்வதை விட, உங்கள் எதிர்காலத்திற்கு தேவையான உதவிகளைச் செய்வதும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் தான் அன்பின் அடையாளம். நடைமுறை வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், காதல் வார்த்தைகள் இவர்களுக்குக் சற்றே செயற்கையாகத் தோன்றும்.

36
விருச்சிகம் :

செவ்வாய் மற்றும் கேதுவின் தாக்கத்தால், விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் மன உணர்வுகளை எளிதில் வெளியில் காட்டமாட்டார்கள். மனதிற்குள் அளப்பரிய பாசத்தை வைத்திருந்தாலும், வெளியில் அமைதியாகவும் கம்பீரமாகவும் வலம் வருவார்கள். ஒருவரை முழுமையாக நம்பும் வரை தங்கள் அன்பை வெளிப்படுத்த மாட்டார்கள். இதனால் பலர் இவர்களைக் கோபக்காரர்கள் என்று தவறாக எண்ணுவது உண்டு.

46
கன்னி :

புதன் பகவானின் ஆதிக்கத்தில் பிறக்கும் கன்னி ராசியினர், எல்லாவற்றிலும் துல்லியத்தையும் ஒழுங்கையும் எதிர்பார்ப்பார்கள். முகத்திற்கு நேராக இனிமையாகப் பேசுவதை விட, உங்களின் சின்னச் சின்னத் தேவைகளைக் கண்டறிந்து பூர்த்தி செய்வதில் தான் இவர்களின் அன்பு ஒளிந்திருக்கும். இவர்கள் உங்களை திருத்த முயல்கிறார்கள் என்றால், உங்களை மிகவும் நேசிக்கிறார்கள் என்று அர்த்தம்.

56
கும்பம் :

ஆளுமைத் திறன் மிக்க கும்ப ராசியினர், தனித்துவமான சிந்தனை கொண்டவர்கள். உணர்வுகளை விட அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பதால், காதலை வெளிப்படையாகப் பேசுவதில் சற்று பலவீனமானவர்கள். தங்கள் பார்ட்னரிடம் காதலனாக நடப்பதை விட, ஒரு நல்ல நண்பனாகவே பழக விரும்புவார்கள். இதனால் இவர்களிடம் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொள்வதே நல்லது.

66
ரிஷபம் :

சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றிருந்தாலும், நில ராசியான ரிஷபம் தனது உணர்வுகளை மெதுவாகவே வெளிப்படுத்தும். அளவுக்கு அதிகமான பிடிவாதமும், தயக்கமும் இவர்களது அன்பை மறைத்துவிடும். வார்த்தைகளை விட, ஒரு உறுதியான துணையாக உங்களுடன் நிற்பதன் மூலம் தங்கள் ஆழமான அன்பை நிரூபிப்பார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories