Astrology: இந்த 4 ராசிக்காரங்க பிறர் மனசுல இருக்கிறத அப்படியே சொல்லிடுவாங்களாம்.! இவங்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்.!

Published : Dec 04, 2025, 12:39 PM IST

Zodiac signs that read other people's minds: ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்தவர்களுக்கு பிறரின் மனதை படிக்கும் திறன் அதிகம் இருக்குமாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
பிறரின் மனதை படிக்கும் ராசிகள்

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்துவமான குணநலன்கள் உண்டு. சில ராசியில் பிறந்தவர்கள் பிறரின் உணர்வுகளையும், எண்ணங்களையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்களின் உள்ளுணர்வு அல்லது உள்ளுணர்வால் அறிந்து கொள்ளும் திறன் அதிகமாக இருக்கும். 

இவர்களின் உணர்ச்சிப்பூர்வமான நுண்ணறிவும், மற்றவர்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்து கொள்ளும் உள்ளுணர்வு சக்தியின் காரணமாக பிறரின் மனதை எளிதில் படிப்பவர்களாக உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
கடகம்

கடக ராசிக்காரர்கள் சந்திர பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் அதிக உள்ளுணர்வு கொண்டவர்கள். இவர்கள் பிறரின் ஆழமான உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்கள் மற்றவர்கள் மீது மிகுந்த அனுதாப குணம் கொண்டவர்கள். ஒருவரின் உடல் மொழி, குரலில் ஏற்படும் மாற்றம், துக்கம் மற்றும் மகிழ்ச்சி போன்ற நுட்பமான விஷயங்களை உணரும் திறன் இவர்களுக்கு உண்டு. மற்றவர்களின் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் அவர்கள் சொல்லாமலேயே அவர்கள் கண்களை வைத்து புரிந்து கொள்கிறார்கள். கடக ராசிக்காரர்கள் இயற்கையாகவே மற்றவர்களின் பாதுகாவலர்களாகவும் இருப்பார்கள்.

35
மீனம்

மீன ராசிக்காரர்களின் மனநிலை மிகவும் உணர்திறன் கொண்டது. இவர்கள் வலிமையான உள்ளுணர்வு கொண்டவர்கள். இவர்கள் தங்களை சுற்றி உள்ளவர்களின் பேசப்படாத எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுடன் எளிதில் இணைகிறார்கள். இவர்கள் மற்றவருடன் பழகும் பொழுது அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வார்கள். நண்பர்கள் அல்லது வாழ்க்கைத் துணையின் மனதில் இருப்பதை பேசாமல் இருந்தாலும் அதற்கு ஏற்ப செயல்படும் ஆற்றல் இவர்களுக்கு இயல்பாகவே உண்டு.

45
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் பிறரின் மனதில் மறைந்திருக்கும் உண்மைகள் மற்றும் நோக்கங்களை உணரும் அசாத்திய திறனை கொண்டுள்ளனர். இவர்கள் மிகவும் கவனிக்கக்கூடிய திறனைப் பெற்றுள்ளனர். ஒருவரின் உடல் மொழி, குரலின் தொனி மூலம் ஒருவர் உண்மையில் என்ன நினைக்கிறார் என்பதை புரிந்து கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தனக்கு எதிரில் இருப்பவர்கள் ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு அதை மறைத்து பேசினால் அதை இவர்களால் புரிந்து கொள்ள முடியும். பிறரின் முக்கியமான ரகசியங்கள் இவர்களுக்கு தெரிந்தது போல மற்றவர்களை உணர வைக்கும் திறனும் இவர்களுக்கு உண்டு.

55
கன்னி

கன்னி ராசிக்காரர்கள் மனிதர்களைப் பற்றிய ஆழமான புரிதலை கொண்டுள்ளனர். இவர்களின் நுண்ணறிவு, கூர்மையான புத்திசாலித்தனம் ஆகியவை பிறரின் மனதில் இருக்கும் விஷயங்களை எளிதாக படிக்க உதவுகிறது. மற்றவர்கள் எண்ணங்கள் என்ன என்பதை சட்டென்று சொல்லிவிடுவார்கள். இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப கருத்துக்களை கூறுவதும், மற்றவர்கள் மனதில் உள்ளதை அப்படியே கூறுவதிலும் வல்லவர்கள். இவர்களுக்கு பிறரின் மனதை படிப்பது என்பது மிகவும் எளிதான காரியமாகும். மேலும் கன்னி ராசியை ஆளும் புதன் பகவான் இவர்களுக்கு கூர்மையான நுண்ணறிவை வழங்குவது இவர்கள் திறனை கொண்டிருப்பதற்கு முக்கிய காரணமாகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories