Astrology: ஒரு வருடத்திற்குப் பின் விருச்சிக ராசியில் அமரும் புதன்.! இந்த ராசிகளின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.!

Published : Dec 04, 2025, 10:45 AM IST

Budhan Peyarchi in Viruchiga Rasi: டிசம்பர் 6, 2025 அன்று புதன் பகவான் தனது ராசியை மாற்ற இருக்கிறார். புதன் பகவானின் பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
14
புதன் பெயர்ச்சி 2025

ஜோதிடத்தில் புதன் பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, வணிகம், தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இவர் டிசம்பர் 6, 2025 இரவு 8:52 மணி அளவில் துலாம் ராசியில் இருந்து வெளியேறி விருச்சிக ராசிக்குள் பெயர்ச்சியாகிறார். புதன் பகவான் 21 நாள் முதல் ஒரு மாதம் வரை ஒரு ராசியில் சஞ்சரிப்பார்.

அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் இரண்டு முறை ராசி மாற்றம், மூன்று முறை நட்சத்திர மாற்றம் உட்பட ஐந்து முறை தனது நிலைப்பாட்டை மாற்றுகிறார். டிசம்பர் 6 அன்று நிகழும் புதன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களும், அதிர்ஷ்டங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
விருச்சிகம்

விருச்சிக ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்திற்கு புதன் பகவான் செல்ல இருக்கிறார். எனவே விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தொழில் ரீதியாக பல நன்மைகளை அனுபவிப்பீர்கள். புதன் பகவான் புதிய வருமானத்திற்கான ஆதாரங்களை உருவாக்குவார். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள். சிறியதாக தொழில் நடத்தி வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். தொழிலில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

34
கும்பம்

கும்ப ராசியின் பத்தாவது வீடான தொழில் மற்றும் கர்ம ஸ்தானத்திற்கு புதன் பகவான் செல்ல இருக்கிறார். வணிகத்தின் காரகரான புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு செல்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக கும்ப ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நன்மைகளை அனுபவிப்பீர்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிப்பதால் அதிக லாபத்தை அனுபவிப்பீர்கள். மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் கூடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையால் கடினமான வேலைகளையும் சிறப்பாக முடிப்பீர்கள்.

44
மகரம்

மகர ராசியின் 11வது வீட்டிற்கு புதன் பகவான் பெயர்ச்சி ஆகிறார். 11 வது வீடு லாப ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. மகர ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதகமான பலன்களை அளித்து முன்னேற்றத்திற்கான கதவுகளை திறக்கும். வணிகம் மற்றும் தொழிலில் புதிய உச்சங்களைத் தொடுவீர்கள். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு அல்லது கூடுதல் வருமானத்திற்கான ஆதாரங்கள் உருவாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு நின்ற வேலைகள் முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக அடுத்த சில தினங்களுக்கு மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசமாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories