Astrology: இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கூட இரக்கமில்லாதவர்களாம்.! இவங்ககிட்ட உஷாரா இருக்கணும்

Published : Aug 21, 2025, 06:10 PM IST

ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்தவர்கள், பிறர் எல்லைகளை மீறும் பொழுது இரக்கமற்றவர்களாக மாறுவார்களாம். அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
பிறரிடம் இரக்கம் காட்டாத 4 ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான குணங்கள் மற்றும் பண்புகள் இருக்கும். சில ராசிக்காரர்கள் கோபம் கொண்டவர்களாகவும், இரக்கமற்ற குணங்கள் நிறைந்தவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களின் எல்லைகளை பிறர் மீறும் பொழுது இரக்கமற்றவர்களாக மாறுவதாக கூறப்படுகிறது. இந்த ராசிகளில் பிறந்தவர்கள் தங்கள் செயல்கள் மற்றும் வார்த்தைகளால் பிறரை காயப்படுத்தும் குணம் கொண்டவர்கள். மற்றவர்கள் தங்கள் பேச்சை கேட்காத சூழலில் அல்லது தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இல்லாத போது அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் மிருகம் வெளியே வரலாம். அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
1.மகர ராசி

மகர ராசிக்காரர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்துபவர்களாகவும், ஒழுக்கமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களை ஆளும் கிரகம் சனி. சனி கிரகமானது கடின உழைப்பு, பொறுப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்த ராசிக்காரர்கள் தங்களது இலக்குகளை அடைவதற்காக உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து விடுவார்களாம். இதனால் சில சமயங்களில் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் கடினமான முடிவுகளை எடுப்பார்களாம். அவர்களின் கோபம் எல்லையை மீறும் பொழுது அவர்கள் இரக்க குணத்தை வெளிப்படுத்த தயங்குவதில்லை. அவர்கள் உணர்ச்சிரீதியாக கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்த மாட்டார்கள். இருப்பினும் அவர்கள் செயல்பாடுகள் பிறரை மனதளவில் காயப்படுத்தும்.

35
2. விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமான ஆளுமை மற்றும் உணர்ச்சிக்கு பெயர் பெற்றவர்கள். இவர்களை ஆளும் கிரகங்கள் செவ்வாய் மற்றும் புளூட்டோ ஆகும். இவை மாற்றம், ஆற்றல், கட்டுப்பாடுடன் தொடர்புடையவை. இவர்கள் தங்கள் இலக்குகளை அடைய அல்லது தங்கள் நம்பிக்கைகளை பாதுகாப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம். இவர்களுக்கு மற்றவர்களை உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் திறன் இருந்தாலும், தங்கள் நலனை முன்னிலைப்படுத்தும் பொழுது அவர்கள் இறக்கமற்றவர்களாக தோன்றுகின்றனர். தங்களுக்கு யாரேனும் தவறிழைப்பதாக தோன்றினால் அவர்கள் இறக்கமற்றவர்களாக மாறி பழி வாங்காமல் விடுவதில்லை. இவர்கள் உளவியல் ரீதியாக தாக்குவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களிடம் மன்னிக்கும் குணம் குறைவு. பழிவாங்கும் குணம் அதிகம்.

45
3.கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்கள் சுதந்திரமான மற்றும் தர்க ரீதியான சிந்தனைக்கு பெயர் பெற்றவர்கள். இவர்களை ஆளும் கிரகங்கள் சனி மற்றும் யுரேனஸ். இது புதுமை மற்றும் சுதந்திரத்துடன் தொடர்புடையவை. இவர்கள் உணர்ச்சிகளை விட பகுத்தறிவுக்கு முன்னிலை கொடுப்பார்கள். இதனால் அவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். சமூக நீதி மற்றும் பெரிய காரணங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் தனிப்பட்ட உறவுகளுக்கு இவர்கள் இரக்கம் காட்டுவதில்லை. அவர்களுக்கு பிடிக்காத விஷயங்கள் நடக்கும் பொழுது உணர்ச்சிகளை புறந்தள்ளி மனிதர்களை அலட்சியப்படுத்துவார்கள். இது அவர்களை இதயமற்றவர்களாக வெளிப்படுத்தக் கூடும். அவர்கள் வாழ்க்கையில் சிலர் தேவையில்லை என்று முடிவெடுத்து விட்டால், எந்த தயக்கமும் காட்டாமல் அவர்களை வெளியேற்றி விடுவார்கள். கும்ப ராசிக்காரரிடம் உணர்வுபூர்வமான ஆதரவை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும்.

55
4.மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்கள் தைரியமான முனைப்பான மற்றும் தலைமைத்துவம் கொண்டவர்கள். இவர்களை ஆளும் கிரகம் செவ்வாய். இது ஆற்றல், உந்துதல் மற்றும் முனைப்புடன் தொடர்புடையது. இவர்கள் எப்போதும் தங்களது இலக்குகளை நோக்கிய பயணத்தில் உறுதியாக இருப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளை கவனிக்காமல் முன்னேறிச் செல்வார்கள். இவர்களின் நேரடியான அணுகுமுறை சில சமயங்களில் மற்றவர்களுக்கு கடினமாகவோ அல்லது இரக்கமற்றதாகவோ தோன்றலாம். மேலும் மேஷ ராசிக்காரர்கள் தூண்டப்படும் பொழுது வெகுண்டு எழும் தன்மை உடையவர்களாக இருக்கின்றனர். இதன் வெளிப்பாடு அவர்களை இரக்கமற்றவர்களாக காட்டுகிறது. கோபத்தில் அவர்கள் யோசித்துப் பேசுவதில்லை. அவர்களின் வார்த்தைகள் ஆழமான காயத்தை ஏற்படுத்துகின்றன. விளைவுகள் பற்றி யோசிக்காமல் மற்றவர்களை அவர்கள் காயப்படுத்துகின்றனர்.

(பொறுப்பு துறப்பு: மேற்குறிப்பிடப்பட்ட ராசிக்காரர்கள் இரக்கமற்றவர்களாக தோன்றலாம். ஆனால் இது அவர்களின் முழு ஆளுமையை பிரதிபலிக்காது. இவர்களின் நடத்தை பெரும்பாலும் அவர்களின் இயல்பான குணங்கள், கிரகங்களின் தாக்கம் மற்றும் முன்னுரிமைகளால் விளைகிறது. ஒருவரின் முழு ஜாதகத்தை புரிந்து கொள்ளாமல் அவர்களை இரக்கமற்றவர்கள் என்று முத்திரை குத்துவது நியாயமாக இருக்காது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவங்கள், அவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் சூழ்நிலைகளால் இரக்கமற்றவர்களாக மாறுகிறார்கள். இந்த ஜோதிட கருத்துக்கள், ஒவ்வொரு ராசியினரும் அவர்கள் ஆளப்படும் கிரகத்தால் அவர்களின் குணாதிசயங்களை ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories