Zodiac signs that are lucky to become rich: ஜோதிடத்தின்படி சில மாதங்களில் பிறந்த ஆண்களுக்கு இயல்பாகவே கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த மாதங்கள் என்ன? அதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரங்களின்படி ஒரு ஆணின் பிறந்த மாதம் என்பது அவரது வாழ்க்கையை பெரிதாக பாதிக்கிறது. ஒருவர் செல்வந்தராகவோ அல்லது கஷ்டப்படும் நிலையிலோ வாழ்வதற்கு அவர்கள் பிறந்த மாதம் காரணமாக அமைகிறது. ஒரு ஆணின் பிறந்த மாதம் அவரது வாழ்க்கையில் செல்வம் மற்றும் வெற்றியை பெறுவதற்கு முக்கிய வகிக்கிறது. சில மாதங்களில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே பொருளாதார ரீதியாக உயர்வார்கள் என்று நம்பப்படுகிறது. அந்த மாதங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
25
ஜனவரி
ஜனவரி மாதத்தில் பிறந்த ஆண்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இதன் காரணமாக மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைவார்கள். ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் ஒழுக்கமான அணுகுமுறையும், புத்திசாலித்தனமான முடிவுகளையும் எடுப்பார்கள். இது இயல்பாகவே அவர்களுக்கு செல்வத்தை ஈர்க்க உதவுகிறது.
மேலும் இவர்கள் நீண்ட கால திட்டமிடல் மற்றும் முதலீடு செய்வதில் திறமை பெற்று விளங்குகின்றனர். செல்வத்தை பெருக்கும் விதமான நிதி சார்ந்த முடிவுகளை கவனத்துடன் எடுக்கின்றனர். எனவே இவர்கள் எளிதாக கோடீஸ்வரர்களாக மாறுகின்றனர்.
35
ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் பிறந்த ஆண்கள் மனவலிமை மிக்கவர்கள் மற்றும் எதார்த்தமானவர்கள். எந்த ஒரு விஷயமானாலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் பொறுமையுடன் திட்டமிட்டது செயல்படுவார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் கடின உழைப்பையே நம்புகின்றனர். உழைப்பை முதலீடு செய்து அதன் மூலம் செல்வத்தை பெருக்குகின்றனர். தாங்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் சிறப்பானவர்களாக மாற வேண்டும் என்கிற வேட்கை அவர்களிடம் உள்ளது.
தங்களது குடும்ப சூழல், பொறுப்புணர்வு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் காரணமாக அடுத்தடுத்த படிகளில் ஏறி முன்னேறிச் சென்று கொண்டே இருப்பார்கள். இதன் காரணமாக அவர்கள் இயல்பாகவே செல்வந்தர்களாக மாறுகின்றனர்.
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த ஆண்கள் அதிக புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அதிகம் பேசுவதில்லை. ஆனால் செயல்களில் தீவிரமாக இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் தீவிரமாக கவனிக்கும் திறன் பெற்றவர்கள். ஒரு விஷயத்தை பகுப்பாய்வு செய்து அது நடைமுறை சாத்தியமா என்பதை ஆராய்ந்து, அதன் பின்னரே அதில் ஈடுபடுவார்கள். அவர்களின் இந்த திறன் நிதி சார்ந்த விஷயங்களை எடுக்கும் பொழுதும், முதலீடுகள் சார்ந்த விஷயங்களிலும் அவர்களுக்கு பெரிதும் கை கொடுக்கிறது.
அவர்களின் பகுப்பாய்வுத் திறன் அவர்களை நிதி இழப்பிற்கு இட்டுச் செல்வதில்லை. பட்ஜெட்டை போடுவதிலும், சேமிப்பதிலும் திறமையானவர்களாக விளங்குவதால் இவர்கள் இயல்பாகவே செல்வத்தை பெருக்கும் திறன் கொண்டுள்ளனர்.
55
நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்த ஆண்கள் ராஜதந்திரம் மிக்கவர்கள். இவர்கள் பணத்தை சேமிப்பதற்காக பல உத்திகளை கையாளுகின்றனர். தங்களது நிதி வளர்ச்சிக்காக அவர்கள் பல தந்திரமான வேலைகளையும் செய்வார்கள். ஆனால் இது பெரும்பாலும் மற்றவர்களை பாதிக்காத வண்ணமே இருக்கும். மேலும் அவர்கள் நிதியை பெருக்குவதற்கான சரியான பாதையை எளிதாக கண்டறியும் திறனும் பெற்றுள்ளனர்.
கூட்டு முயற்சி அல்லது தனிப்பட்ட முயற்சி ஆகியவற்றின் மூலம் வெற்றியை எளிதில் குவிக்கிறார்கள். இது அவர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றுகிறது. இவர்கள் தொழில் சார்ந்து எடுக்கும் முடிவுகள் அல்லது முதலீடுகள் பெரும்பாலும் வெற்றியையே சந்திக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)