Astrology: இந்த 5 ராசிக்காரங்களுக்கு அடுத்தவங்களை அழ வச்சி பாக்குறது கை வந்த கலை.. இவங்ககிட்ட உஷாரா இருக்கனும்

Published : Aug 17, 2025, 11:21 AM IST

ஜோதிடத்தின்படி குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் அதிக கோபத்துடனும், பிறரை காயப்படுத்தும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
Zodiac signs that hurt others

சில ராசிக்காரர்கள் இயல்பிலேயே அதிக கோபத்தை வெளிப்படுத்தும் குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்கள் மனதளவில் பலவீனமாக இருப்பவர்கள், தங்களது எதிர்ப்பை வெளிக்காட்ட முடியாதவர்கள் அல்லது சாதுவான குணம் கொண்டவர்களை தொடர்ந்து காயப்படுத்துகின்றனர். இதற்கு காரணம் இந்த ராசிக்காரர்களை ஆளும் கிரகங்களாக இருக்கலாம். எந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை காயப்படுத்தும் குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

26
1. மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். செவ்வாய் கிரகமானது போர் கிரகமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இவர்களால் கோபத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. அவர்கள் யாரை வேண்டுமானாலும் கடுமையாக தாக்குவார்கள். பிறரை துன்புறுத்துவதற்கு காரணம் தேவையில்லை. அவர்கள் நினைத்து விட்டால் பிறரின் மனதை சுக்குநூறாக உடைக்கும் வரை அவர்கள் ஓய்வதில்லை. மேலும் மேஷ ராசிக்காரர்கள் துணிச்சலான, உறுதியான அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர்கள். மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள்.

36
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரனால் ஆளப்படுபவர்கள். காதலின் கிரகமாக சுக்கிரன் இருக்கும் போதிலும் ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள். ஒருவரை கேலி செய்யவோ அல்லது மனதை புண்படுத்தவோ முடிவெடுத்து விட்டால் அவர்கள் மீது எந்த இரக்கமும் இவர்கள் காட்டுவதில்லை. குறிப்பாக யாரேனும் தங்களை கேலி செய்திருந்தால் அவர்களை பழிக்கு பழி வாங்க அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை. எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பது போல தோன்றும் இவர்கள் ஒருவரை காயப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அதை சாதிக்காமல் விடுவதில்லை.

46
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் புதன் கிரகத்தால் ஆளப்படுபவர்கள். இவர்களுக்கு இரட்டை ஆளுமை உண்டு. இவர்களைப் புரிந்து கொள்வதே மிகவும் கடினம். சில நேரங்களில் அதிக அன்பைப் பொழியும் அவர்கள், அடுத்த நிமிடமே வேறு விதமாக மாறிவிடுவார்கள். அவர்களின் இரட்டை முகம், இரட்டைப் பேச்சு, இரட்டை குணங்களால் அவர்களைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். அவர்கள் ஒருவருடன் இணைந்து ஒருவரை மோசமாக கிண்டல் செய்து கொடுமைப்படுத்தலாம். அதே சமயம் பிறர் இல்லாத போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் கூறுவார்கள். அவர்கள் இரு தரப்பில் இருந்தும் வேடிக்கை பார்ப்பதை விரும்புகின்றனர். அவர்களின் இந்த குணத்தை பிறரால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை.

56
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு பிறரை கேலி செய்வது என்பது கை வந்த கலை. இவர்கள் இதை ஒரு விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் பார்க்கின்றனர். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் உணர்வுகளை அதிகம் கருத்தில் கொள்வதில்லை. ஒருவரை காயப்படுத்தும் பொழுது அது அவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதன் காரணமாக அவர்கள் தொடர்ந்து பிறரை காயப்படுத்தும் வேலையை செய்கின்றனர். தனுசு ராசிக்காரர்கள் பிறருக்கு உடல் ரீதியாக தீங்கு விளைவிப்பது இல்லை. அதே சமயம் அவர்கள் மற்றவர்களின் உணர்வுகளையும், தங்களது வார்த்தைகளால் மனதையும் காயப்படுத்தும் குணம் கொண்டவர்களாக விளங்குகின்றனர்.

66
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் தங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்பதற்காக அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்கள் மனரீதியாக காயப்படுகிறார்களா? என்பது குறித்த கவலைகள் அவர்களுக்கு கிடையாது. இவர்கள் யாரை வேண்டுமானாலும் மோசமாக நடத்தலாம். கும்ப ராசிக்காரர்களுக்கு இயற்கையிலேயே குறைந்த அளவே இரக்கம் குணம் உண்டு. ஒருவரை காயப்படுத்த காரணங்களை தேடிக்கொண்டே இருப்பார்கள் இவர்கள் மற்றவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அதன் காரணமாக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

(குறிப்பு: மேற்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிட ரீதியான கருத்துக்களின் அடிப்படையிலானவை மட்டுமே. இதன் நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. ஒருவரின் குணாதிசயங்கள் என்பது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர்கள் வளர்ந்து வந்த விதம், அவர்கள் பெற்ற அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலானது. மேற்குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மட்டுமே இத்தகைய குணங்களுடன் விளங்குவார்கள் என்ற பொருள் கிடையாது)

Read more Photos on
click me!

Recommended Stories