Couples: ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்குரியது என்பதால், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுகின்றன. புதுமணத் தம்பதியரை பிரித்து வைக்கும் வழக்கத்தின் பின்னணி குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஆடி மாதம் தமிழ்நாட்டில் குறிப்பாக கிராமங்களில் இன்றைக்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த நாளாகும். இம்மாதத்தில் ஆடி பிறப்பு, ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு என பல விசேஷங்கள் இந்த மாதத்தில் கொண்டாடப்படும். இம்மாதம் அம்மனுக்கு உரிய மாதம் என்பதால் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது, மஞ்சள் நீர் வைத்து வழிபாடு செய்யப்படும்.
26
குடும்ப விசேஷங்கள் எதுவும் செய்யப்படுவதில்லை
ஆனால் தனிப்பட்ட குடும்ப விசேஷங்கள் எதுவும் செய்யப்படுவதில்லை. அந்த வகையில், ஆடி மாதத்தில் திருமணங்கள், வீடு கிரஹபிரவேசம் போன்ற எந்த ஒரு சுப நிகழ்சிகளும் நடைபெறுவது இல்லை. அதுமட்டுமல்ல ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை பிரித்து வைக்க வேண்டும் என்பது தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. அதுவும் பெண் வீட்டார் சீர் செய்து தங்கள் வீட்டிற்கு பெண்ணை அழைத்துச் செல்வது வாடிக்கை. திருமணம் செய்து கொடுத்த பெண்ணை பிரித்து அழைத்து வருகிறார்கள் என்றார்கள் காரணம் இல்லாமல் இருக்குமா? அவை என்ன என்பதை பார்க்கலாம்.
36
புதுமணத்தம்பதியை பிரித்து வைப்பது ஏன்?
ஆடி மாதம் ஜூலை 17ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி முடியும். ஜூலை-ஆகஸ்ட் காலகட்டத்தில் ஒரு குழந்தை கருத்தரிக்கப்பட்டால், குழந்தை ஏப்ரல்-மே மாதத்தில் பிறக்கும். இது கோடைகாலம் மற்றும் வெப்பத்தின் காரணமாக குழந்தை பெற சிறந்த நேரம் அல்ல. இதனால் தான் ஆடி மாதத்தில் புதுமணத்தம்பதிகளை பிரித்து வைக்கின்றனர்.
ஆடி மாதத்தில் தான் விவசாயிகள் விதை விதைப்பதற்கான சிறந்த காலம் என்பதால் விவசாயிகள் விதைக்கத் தொடங்குவார்கள். மேலும் விவசாயம் செழித்து, வளம் பெருக வேண்டி ஆடி மாதத்தில் மக்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டை மேற்க்கொள்வார்கள். ஆகையால் குலதெய்வ வழிபாடு தவிர்க்கக்கூடாது என்பதற்காக தான் ஆடி மாதத்தில் வேறு எந்த விசேஷங்களும் குறிப்பாக செய்வதில்லை.
56
புதுமனை புகு விழா
அது போல ஆடி மாதத்தில் தான் காற்று அதிகமாக வீசும். மேலும் இந்த மாதத்தில் திடீரென்று மழை பெய்யக் கூடும் என்பதால் புதுமனை புகு விழா, பூமி பூஜை செய்தல், நிலம் வாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகளையும் செய்வதில்லை.
66
திருமணம் நடைபெறுவதில்லை
மேலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இதனால் இறை வழிபாடு செய்யும் போது கவனம் சிதறாமல் மற்றும் தடை படலாம் இருக்க தான் திருமணம், கிரஹபிரவேசம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இம்மாதத்தில் நடத்தப்படுவதில்லை.