நிபுணர்களின் கருத்துப்படி, உங்கள் முன்னாள் காதலர் அல்லது காதலி கனவில் மகிழ்ச்சியாகத் தோன்றினால், உங்கள் வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் முடிந்து, புதிய தொடக்கத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். கடந்த கால நிகழ்வுகளை ஏற்றுக்கொண்டு நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்பதற்கான அறிகுறி இது. அவருடன் சிரித்துப் பேசுவது போல் கனவு வந்தால், சில இனிமையான நினைவுகள் இன்னும் உங்கள் மனதில் உள்ளன என்று பொருள்.
கனவில் முன்னாள் காதலியுடன் சண்டையா?
கனவில் உங்கள் முன்னாள் காதலர் அல்லது காதலியுடன் சண்டையிடுவது போலவோ அல்லது சோகமான சூழலில் இருப்பது போலவோ கண்டால், அது இன்னும் தீர்க்கப்படாத உணர்ச்சிகளைக் குறிக்கலாம். கடந்த கால நிகழ்வுகளால் ஏற்பட்ட வலி, கோபம் அல்லது ஏமாற்றம் இன்னும் முழுமையாக உங்களை விட்டு நீங்கவில்லை என்பதே இதன் அர்த்தம். இதுபோன்ற கனவுகள் வரும்போது, கடந்த காலத்தை மீண்டும் மீண்டும் நினைப்பதை விட, மன அமைதி தரும் செயல்களில் கவனம் செலுத்துவது நல்லது.