கடகம், விருச்சிகம், மீனம் போன்ற நீர் தத்துவ ராசிக்காரர்கள் உணர்ச்சிபூர்வமாகவும் புதுமை சிந்தனையுடனும் இருப்பார்கள். மினரல் வாட்டர், பால் பொருட்கள், மருந்து, இரசாயனம், ஏற்றுமதி-இறக்குமதி, கலை மற்றும் டிசைனிங் துறைகள் இவர்களுக்கு ஏற்றதாக கருதப்படுகின்றன. இருப்பினும், ராசி மட்டுமே வெற்றியை தீர்மானிக்காது என்றும், கடின உழைப்பு, திட்டமிடல், தன்னம்பிக்கை மற்றும் சரியான முடிவுகளே தொழிலில் உண்மையான வெற்றியைத் தரும் என்றும் ஜோதிட வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.