Hamsa Rajayoga: ஜூன் 2 முதல்.. மகா ராஜயோகத்தால் கோடீஸ்வரராகப் போகும் அந்த 5 ராசிகள் எவை?

Published : May 31, 2026, 02:06 PM IST

Jupiter Transit 2026: ஜூன் 2-ம் தேதி குரு பகவான் கடக ராசிக்குள் நுழைவதால், சுபமான 'ஹம்ச ராஜயோகம்' உருவாகிறது. இந்த குரு பெயர்ச்சியால் ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், பண வரவு, மற்றும் சமூகத்தில் நற்பெயர் போன்ற பலன்கள் கிடைக்கப் போகிறது.

PREV
16
ஹம்ச ராஜயோகம்

ஜோதிட சாஸ்திரத்தில் 'தேவகுரு' என்று அழைக்கப்படுபவர் வியாழன் (குரு பகவான்). நவகிரகங்களில் மிகவும் சுபமான கிரஹமாகவும், மனிதர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம், அறிவு மற்றும் மகிழ்ச்சியை அள்ளித் தரும் முதன்மைக் கடவுளாக போற்றப்படுகிறார். இந்நிலையில் ஜூன் 2-ம் தேதி தேவகுரு வியாழன் கடக ராசிக்குள் நுழைகிறார். குருவின் இந்த அதிரடி ராசி மாற்றத்தின் காரணமாக, ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் மிக மிகச் சுபமானதாகக் கருதப்படும் 'ஹம்ச ராஜயோகம்' உருவாகிறது. இதனால் இந்த 5 ராசிகளுக்கு அதிஷ்ட மழை கொட்டப்போகிறது.

26
கடகம்

தேவகுரு வியாழன் கடக ராசிக்குள் நுழைவதால், ஹம்ச ராஜயோகம் நேரடியாக உங்களுக்கு உருவாகிறது. இதனால், சமூகத்தில் பெரிய ஆட்களுடன் பழக்கம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். சின்ன முயற்சி எடுத்தால் கூட, இந்த நேரத்தில் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.

36
விருச்சிகம்

வியாழன் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். அக்டோபர் 31-க்குள் உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆனால், வருமானம் கூடும்போது செலவுகளும் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

46
மிதுனம்

வியாழன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருக்கிறார். இந்த நேரத்தில், சமூகத்தில் பெரிய தலைவர்கள் மற்றும் குருமார்களுடன் உங்கள் நெருக்கம் அதிகரிக்கும். விரும்பிய இடத்திற்கு பயணம் செல்ல வாய்ப்புள்ளது. முக்கியமாக, பணம் சம்பாதிக்க பல புதிய வழிகள் ஏற்படும். உங்கள் மனம் ஆன்மீக காரியங்களில் ஈர்க்கப்படும்.

56
கன்னி

வியாழன் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிப்பது அதிக பலன்களைத் தரும். புது கார் அல்லது வாகனம் வாங்கும் உங்கள் கனவு நனவாகலாம். உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. எந்த வேலையை எடுத்தாலும் அதில் சுலபமாக வெற்றி பெறுவீர்கள். பல ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்கும் வாய்ப்பும் ஏற்படும்.

66
மகரம்

மகர ராசிக்கு ஏழாவது வீட்டில் ஹம்ச ராஜயோகம் உருவாகிறது. தேவகுருவின் ஆசியால், எவ்வளவு கடினமான வேலையையும் நீங்கள் வெற்றிகரமாக முடிப்பீர்கள். எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும், அவற்றை எளிதாக சமாளிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். அக்டோபர் 31 வரை லட்சுமி உங்கள் பக்கம் இருப்பாள். நீண்ட தூரப் பயணம் செல்ல வலுவான வாய்ப்பு உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories