Weekly Horoscope: அடுத்த 7 நாட்கள்.! 3 ராஜயோகத்தால் இந்த 5 ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுது.!

Published : Jun 08, 2026, 09:50 AM IST

Weekly Horoscope June 8 to June 14: ஜோதிடத்தின்படி, ஜூன் 8 முதல் 14, 2026 வரை அடுத்த 7 நாட்களுக்கு கஜலட்சுமி யோகம், தன யோகம், கௌரி யோகம் என 3 ராஜயோகங்கள் இணைவதால், 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. அதுகுறித்து இங்கு காணலாம். 

PREV
15
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூன் இரண்டாவது வாரம் வேலையில் வெற்றியையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரும். பண வரவு அபரிமிதமாக இருக்கும். இந்த வாரம் செய்யும் முதலீடுகள் லாபம் தரும். ஆனால் ரிஸ்க் நிறைந்த முதலீடுகளை செய்வதற்கு முன் நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. முக்கியமான விஷயத்தில் எந்த அவசர முடிவையும் எடுக்க வேண்டாம். இந்த வாரம் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெறும்.

இதையும் படியுங்கள்:  Today Rasi Palan: இன்று சுக்கிரன் பெயர்ச்சி.! கடக ராசியில் கஜலக்ஷ்மி ராஜயோகம்.! 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!

25
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூன் இரண்டாவது வாரம் பண விஷயத்தில் மிகவும் சாதகமான வாரமாக இருக்கும். திடீர் பண லாபம் கிடைக்க வாய்ப்பு அதிகம் உண்டு. பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் நோய் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். குடும்ப வாழ்க்கை முன்பை விட நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையிடம் இருந்து நிறைய அன்பு கிடைக்கும். குடும்பத்தகராறுகள் பேசி தீர்க்கப்பட்டு, ஒற்றுமை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:  Kaal Sarp Yog: ராகு கேதுவுக்கு இடையில் சிக்கும் கிரகங்கள்.! உருவாகும் கால சர்ப்ப யோகம்.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.!

35
கன்னி

கன்னி ராசிக்காரங்களுக்கு அடுத்த 7 நாட்கள் மிகவும் சுபமானதாக இருக்கும். பண வரவு அபரிமிதமாக இருக்கும். திடீர் பண லாபம் கிடைக்க நல்ல வாய்ப்புகள் உண்டு. இந்த வாரம் நீங்கள் மேற்கொள்ளும் எந்த பயணமும் உங்களுக்கு வெற்றியைத் தரும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் திறமைகள் அங்கீகரிக்கப்படும். சரியான நேரத்தில் வேலையை முடிப்பதால் உங்கள் மேலதிகாரிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாரத்தின் நடுவில் சிறு சிறு பிரச்சனைகள் எழக்கூடும். ஆனால் அவை அனைத்தும் வார இறுதியில் சரியாகிடும்.

இதையும் படியுங்கள்:  Mangal Gochar 2026: செவ்வாய் பெயர்ச்சி 2026.! இந்த 5 ராசிகளுக்கு ஆபத்து.! பணம், பதவிக்கு சிக்கல்.!

45
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வரும். உங்கள் பெயரும், புகழும் அதிகரிக்கும். இந்த வாரம், மிகவும் திருப்தியாக உணர்வீர்கள். காதல் வாழ்க்கையிலும் முன்னேற்றம் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்திலும் சிறப்பு கவனம் செலுத்துவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் சந்தோஷமான அனுபவங்கள் கிடைக்கும். பிள்ளைகளின் திருமணத்திற்கு வரன் தேடிக் கொண்டிருக்கும் பெற்றொர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:  Numerology: இந்த தேதியில பிறந்தவங்களுக்கு காசு பணம் நிறைய இருக்கும், ஆனா மன நிம்மதி சுத்தமா இருக்காது.!

55
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு, ஜூன் இரண்டாவது வாரம் திடீர் வெற்றி கிடைக்கும். பண வரவைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்கள் குடும்பத்தில் நிம்மதியை உணர்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவும் உங்களுக்கும் கிடைக்கும். பிள்ளைகள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் உறவு சுமூகமாக இருக்கும். இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் படிப்படியாக முன்னேறும். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories