Venus Transit 2026: அசுர குருவின் அதிரடி ஆட்டம்! இன்று முதல் அதிர்ஷ்ட கதவுகள் திறந்து கோடீஸ்வரராகப் போகும் அந்த 4 ராசிகள் யார் யார்?

Published : Jun 13, 2026, 10:31 AM IST

Astrology: இன்று சுக்கிர பகவான் துணிச்சலும் கம்பீரமும் நிறைந்த சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இந்த பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் கதவுகள் திறந்து, எதிர்பாராத நன்மைகள் அள்ளிக்கொடுக்கப்போகிறது.

PREV
15
சுக்கிர பகவான்

ஜோதிட சாஸ்திரத்தில் சக்தி வாய்ந்த கிரகங்களின் ஒன்று சுக்கிர பகவான். இவர் காதல், அழகு, செல்வம், ஆடம்பரம் மற்றும் ஈர்ப்புத் திறனின் அதிபதியாக விளங்கக்கூடியவர். நவகிரகங்களின் 'அசுர குரு' என்று அழைக்கப்படும் சுக்கிரனின் இயக்கம் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தும். அந்த வகையில், 2026 ஜூன் 13 இன்று சுக்கிர பகவான் துணிச்சலும் கம்பீரமும் நிறைந்த சிம்ம ராசிக்குள் நுழைகிறார். சிம்ம ராசிக்குள் சுக்கிரன் செல்வதால் அனைத்து ராசிகளின் காதல், பொருளாதாரம் மற்றும் தன்னம்பிக்கையில் மாற்றங்கள் ஏற்படும். இருப்பினும், இந்த பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் கதவுகள் திறந்து, எதிர்பாராத நன்மைகள் அள்ளிக்கொடுக்கப்போகிறது.

25
ரிஷபம்

சுக்கிரனை ஆளும் கிரகமாகக் கொண்ட ரிஷப ராசியினருக்கு, சுக்கிர பெயர்ச்சி நேரடி நன்மைகளையும் புதிய தொடக்கங்களையும் தரப்போகிறது. தொழில் மற்றும் வியாபார நிமித்தமாக நீங்கள் மேற்கொள்ளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாகப் பெருமளவு லாபம் கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். நிதி ரீதியாக இருந்த ஏற்றத்தாழ்வுகள் மறைந்து, பண வரவு சீராகும். சேமிப்புகள் உயரும். உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த சவால்களும், வேலைப்பளுவும் குறைப்போகிறது. கடின உழைப்பிற்கு ஏற்ற புதிய அங்கீகாரமும், உயர் பதவிகளும் கிடைக்கும்.

Astrology: குரு, சுக்கிரன், சந்திரன் கூட்டணி! ஜூன் 17 முதல் இந்த 3 ராசிகளுக்குப் புதையல் அடித்தது போல யோகம்!

35
சிம்மம்

உங்கள் ராசியின் லக்னப் பகுதிக்கே சுக்கிரன் வருகை தருவதால், சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் இனி நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலைத்து நிற்கப்போகிறது. புதிய வீடு, நிலம் அல்லது சொகுசு வாகனங்கள் வாங்கும் யோகம் தானாகவே கைகூடி வரும். வியாபாரத்தில் எதிர்பாராத இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உங்களது வருமானம் மற்றும் பொருளாதார நிலை அசுர வேகத்தில் உயரும். கணவன் - மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்யோன்யம் கூடும். வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும்.

45
விருச்சிகம்

சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் விருச்சிக ராசியினருக்குப் புதிய எல்லைகளை விரிவுபடுத்தி, வெற்றிக்கான பாதையை அமைத்துக் கொடுக்கப் போகிறது. கடந்த காலத்தில் உங்களை முடக்கிப் போட்ட சவால்களும், எதிர்ப்புகளும் விலப்போகிறது. அலுவலகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் தேடி வரும். தொழில் மற்றும் வணிகத்தை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு இது பொன்னான காலம். நீண்ட கால வெற்றிக்கான வலுவான அடித்தளத்தை இப்போது அமைப்பீர்கள்.

Surya Gochar 2026: இனி 1 மாதத்திற்கு இவங்கதான் ராஜா! ஜூன் 15 சூரிய பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 5 ராசிகள்!

55
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த கிரகப் பெயர்ச்சியானது வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் உங்களை முதன்மையான இடத்தில் கொண்டு போய் நிறுத்தப்போகிறது. திருமண வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். நிதி நிலைமை உச்சத்தை தொடும் என்பதால், கையில் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். வெற்றியை நோக்கிய உங்கள் பயணம் இப்போது வேகம் எடுக்கும். தடைபட்டுக் கிடந்த காரியங்கள் அனைத்தும் மிகச் சரியான நேரத்தில் சுமுகமாக முடிவடையும். உங்களது நீண்ட காலக் கனவுகள் மற்றும் லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள இதுவே மிக உகந்த நேரமாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories